நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

ஒரு தக்காளியை வைத்து முகத்தில் இருக்கும் எல்லா வகையான பிரச்சனைகளுக்கும் 3 நாட்களில் தீர்வு பெற முடியும். மிஸ் பண்ணாம இந்த சிம்பிள் டிப்ஸ் தெரிஞ்சு வச்சுக்கோங்க.

நம்முடைய முகத்தில் இருக்கும் பிரச்சனையை சுலபமாக 5 வகைகளில் பிரித்துவிடலாம்.

 முதலாவது முகம் பொலிவிழந்து காணப்படுவது. இரண்டாவது முகப்பரு பாதிப்பு இருக்கும். மூன்றாவது கண்ணுக்குக் கீழே கருவளையம் வாயை சுற்றி கருவளையம் இருக்கும். நான்காவது சில பேருக்கு ஸ்கின் பலபலன்னு, கிளாசி ஸ்கின் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். சிலபேருக்கு முகத்தில் அதிகமாக பிளாக் ஹெட்ஸ், வொயிட் ஹெட்ஸ் இருக்கும். இந்த எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு காண ஒரு தக்காளி போதும். அது எப்படின்னு உங்களுக்கும் தெரிஞ்சுக்க ஆசையா இருக்கா வாங்க பார்க்கலாம்.

சோர்வான முகத்தை உடனடியாக பொலிவாக மாற்ற:
தக்காளி பழத்தை வட்ட வடிவில் வெட்டிக் கொள்ளுங்கள். வட்ட வடிவத்தில் வெட்டிய ஒரு துண்டு தக்காளி பழம் இருந்தால் போதும். 2 டேபிள் ஸ்பூன் அளவு தேங்காய் பால் நமக்கு தேவைப்படும். சிறிய கிண்ணத்தில் தேங்காய் பாலை ஊற்றி வட்டமாக வெட்டி வைத்திருக்கும் தக்காளியை, தேங்காய் பாலில் போட்டு 5 நிமிடங்கள் அப்படியே விட்டு விடுங்கள். உங்களுடைய முகத்தை சுத்தமாக கழுவி துடைத்து கொள்ளுங்கள். தேங்காய் பாலில் ஊறிக் கொண்டிருக்கும் வட்டவடிவ தக்காளியை எடுத்து முகத்தில் ஜென்டிலாக 10 நிமிடம் மசாஜ் செய்து கொடுத்தால் உங்களுடைய முகம் உடனடியாக பொலிவு பெறும்.

முகப்பரு பாதிப்பு நீங்க:
வட்ட வடிவில் வெட்டிய தக்காளி பழத்தை சிறிது நேரம் சுத்தமான தேனில் ஊற வைக்க வேண்டும். அதன் பின்பு தேனில் ஊறவைத்த தக்காளி பழத்தை எடுத்து உங்களுடைய முகத்தை சுற்றி சுற்றி அப்படியே வட்ட வடிவில் லேசாக 10 நிமிடங்கள் மசாஜ் செய்து வந்தால் முகப்பரு பாதிப்பு படிப்படியாகக் குறையும். முகப்பரு வந்த இடத்தில் தழும்பு இருந்தாலும், அதுவும் சில நாட்களில் காணாமல் போகும்.
கண் கருவளையம் வாயை சுற்றி கருவளையம் நீங்க.
வட்ட வடிவில் இருக்கக்கூடிய தக்காளி பழத்தின் மேலே சிறிது கஸ்தூரி மஞ்சளை தூவி கொள்ளுங்கள். இந்த தக்காளி பழத்தை எடுத்து அப்படியே உங்களுடைய முகத்தில் வைத்து வட்ட வடிவமாக 10 நிமிடங்கள் மசாஜ் செய்து கொடுக்க கருவளையம் படிப்படியாக குறையத் தொடங்கும்.

முகன் பலபலன்னு ஜொலிக்க:
தக்காளியை வட்ட வடிவில் வெட்டிக் கொண்டு அதன் மேலே Rosehip oil நான்கு சொட்டுகள் விட்டு அதன் பின் அந்த தக்காளி பழத்தை அப்படியே நம்முடைய முகத்தில் வைத்து வட்ட வடிவமாக 10 நிமிடம் லேசாக மசாஜ் செய்து கொடுக்க சில நாட்களிலேயே முகம் பளபளக்க தொடங்கிவிடும். (Rosehip oil ஆன்லைனில் உங்களுக்கு கிடைக்கும். அப்படி இல்லை என்றால் பெரிய பெரிய சூப்பர் மார்க்கெட்டில் இதை வாங்கிக் கொள்ளலாம்.)
முகத்திலிருக்கும் பிளாக் ஹெட்ஸ் வொயிட் ஹெட்ஸ் நீங்க:
வட்டவடிவமாக தக்காளி பழத்தை வெட்டி கொண்டு, அதன் மேலே கொஞ்சமாக அரிசி மாவை தூவி இதை எடுத்து அப்படியே உங்களுடைய முகத்தில் ஜென்டிலாக வட்ட வடிவில் 10 நிமிடம் மசாஜ் செய்து கொடுக்க முகத்தில் இருக்கும் பிளாக் ஹெட்ஸ் வொயிட் ஹெட்ஸ் நீங்கிவிடும். (அரிசி மாவை கொண்டு மட்டும் அடிக்கடி முகத்தை ஸ்கரப் செய்யக்கூடாது. முகத்தில் கீறல் விழுந்துவிடும். இதை வாரத்தில் ஒரு நாள் மட்டும் தான் செய்ய வேண்டும்.)

ஒரே ஒரு தக்காளி தான். உங்களுக்கு முகத்தில் என்ன பிரச்சனை இருக்கிறதோ அதற்கு ஏற்றார்போல் தக்காளி பழத்தின் மேலே அந்த பொருளை தடவி, அந்த பொருள் உங்களுடைய முகத்தில் படும்படி வைத்துக் கொண்டு இந்த தக்காளி பழத்தை வைத்து முகத்தை லேசாக மசாஜ் செய்து கொடுங்கள். முகத்தில் மேல் சொன்ன பிரச்சனைகள் அதிகமாக இருந்தால் இந்த டிப்ஸை தினமும் பின்பற்றி வரலாம். பிரச்சனைகளுக்கு முழுமையான தீர்வு கிடைத்த பின்பு வாரத்தில் ஒருமுறை இதை பின்பற்றினால் கூட போதும். உங்களுக்கு இந்த டிப்ஸ் பிடித்திருந்தால் லைக் பண்ணி பாருங்க.



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்