நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

ஆயிரம் ஆயிரமா காசு கொடுத்து கிரீம் வாங்கி போட்டும் முகம் அழகாக மாற வில்லையா. தீர்க்கமுடியாத சரும பிரச்சனைகளை கூட தீர்க்க இந்த 1 இலை போதும்.

நம்முடைய முகத்தில் தீர்க்கவே முடியாத சில பிரச்சனைகள் நீண்ட நாட்களாக இருக்கும்‌. அந்த பிரச்சனையை சரிசெய்ய ஆயிரக்கணக்கில் காசை செலவழித்து இருப்போம். 

ஆனாலும் அந்த பிரச்சனைக்கு தீர்வு மட்டும் கிடைத்திருக்காது. முகம் முழுவதும் முகப்பருக்கள், கரும்புள்ளிகள், கட்டி அல்லது கரும் திட்டுகள் கருவளையங்கள் இப்படி எந்த பிரச்சனை இருந்தாலும் சரி, முகம் பொலிவிழந்து காணப்படும். அத்தனை பிரச்சினைக்கும் தீர்வு தரும் ஒரு டிப்ஸ் உங்களுக்காக. நம்முடைய வீட்டில் மலிவாக கிடைக்கக்கூடிய சில பொருட்களை வைத்தே இந்த க்ரீமை நாம ரெடி பண்ணலாம். வாங்க நேரத்தைக் கடத்தாமல் ரெமிடியை பார்த்துவிடலாம்.

முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து கொள்ளுங்கள். அதில் 1 டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும். தண்ணீர் சூடான பின்பு கறிவேப்பிலை – 4 கொத்து, வெந்தயம் – 2 ஸ்பூன், இந்த பொருட்களையும் போட்டுக் கொள்ள வேண்டும். கருவேப்பிலையை பயன்படுத்துவதற்கு முன்பு தண்ணீரில் நன்றாக கழுவிக் கொள்ளுங்கள்.

இப்போது நாம் ஊற்றிய 1 டம்பளர் தண்ணீரானது நன்றாகக் கொதித்து 1/2 டம்ளர் தண்ணீர் அளவுக்கு வரவேண்டும். கருவேப்பிலை வெந்தயத்தின் எசன்ஸ் தண்ணீரில் நன்றாக இறங்க வேண்டும். தண்ணீரின் நிறம் நன்றாக மாறிவிடும். அதன் பின்பு அடுப்பை அணைத்து விடுங்கள். இதை நன்றாக ஆற வைத்து விடவேண்டும். ஆறிய பின்பு ஒரு வடிகட்டி மூலம் தண்ணீரை தனியாக பிரித்து எடுத்து விடுங்கள். வேக வைத்த கறிவேப்பிலையையும் வெந்தயத்தையும் மட்டும் மிக்ஸி ஜாரில் போட்டு முதலில் நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
அதன் பின்பு வடிகட்டி வைத்திருக்கும் தண்ணீரையும் இந்த விழுதோடு சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி எல்லாவற்றையும் மைய அரைத்துக் கொண்டால், நமக்கு ஒரு கலவை கிடைத்து விடும் அல்லவா. இதை ஒரு வடிகட்டி மூலம் நன்றாக வடிகட்டி எடுத்துக்கொள்ளுங்கள். நமக்கு தேவையான சாறு மட்டும் கிடைத்துவிட்டது.

இந்த சாறுடன் 1 ஸ்பூன் அளவு அலோ வேரா ஜெல், கால் ஸ்பூன் கஸ்தூரி மஞ்சள் இந்த இரண்டு பொருட்களையும் சேர்த்து நன்றாக கலந்து இதை ஒரு பாட்டிலில் ஸ்டோர் செய்து பிரிட்ஜில் வைத்துக் கொண்டால், 7 நாட்கள் வரை பயன்படுத்தலாம். இரவு தூங்கும் போது இந்த ஜெல்லை முகம் முழுவதும் அப்ளை செய்து நன்றாக 5 நிமிடங்கள் மசாஜ் செய்து விட்டு அப்படியே விட்டு விடுங்கள்.
மறுநாள் காலை எப்போதும் போல உங்களுடைய முகத்தை குளிர்ந்த நீரில் கழுவி விட்டால் போதும் முகத்தில் இருக்கும் தீர்க்கமுடியாத பிரச்சினைகளுக்கு படிப்படியாக தீர்வு கிடைக்க ஆரம்பிக்கும். உங்களுக்கு இந்த குறிப்பு பிடித்திருந்தால் உங்க வீட்டில ட்ரை பண்ணி பாருங்க. ஒரு வாரம் ட்ரை பண்ணி பார்த்து, நல்ல ரிசல்ட் கிடைத்தால் அதன் பின்பு இதை தினமும் நீங்கள் தொடர்ந்து செய்து வரலாம். சருமத்திற்கு எந்த ஒரு பக்க விளைவுகளும் ஏற்படாது.



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்