நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

உங்களுக்கு பாதங்களில் சுருக்கம் இருக்கா? அதனை எப்படி போக்கலாம்?

 பொதுவாக முகச்சுருக்கங்களை காட்டிலும் அதிக சுருக்கங்கள் பாதங்களில் காணப்படும்.


குறிப்பாக ஆண்களை காட்டிலும் பெண்களின் பாதங்களை உற்றுநோக்கினால் நன்றாகவே சுருக்கங்களை பார்க்க முடியும்.

குதிகால் வெடிப்பு, பாதங்களில் பராமரிப்பின்மையால் உருவாகும் வீக்கம், பூஞ்சை தொற்று போன்றவற்றால் இவை ஏற்படுகின்றது.

இவற்றை எளியமுறையில் கூட போக்க முடியும். தற்போது அவை என்னென்ன என்பதை இங்கே பார்ப்போம்.


தேவை


  • அரிசி மாவு - 2 தேக்கரண்டி
  • ஆப்பிள் சீடர் வினிகர் - அரை டீஸ்பூன் அளவு
  • தயிர் -3 டீஸ்பூன்
  • தேன் - 1 டீஸ்பூன்


செய்முறை     

  • அரிசி மாவுடன் அனைத்து பொருள்களையும் சேர்த்து நன்றாக குழைக்கவும். கலவை தளர இருக்கவேண்டும் என்பதால் தயிர் பற்றாக்குறை இருந்தாலும் மீண்டும் தேவையான அளவு சேர்க்கலாம்.

  • இதை கலந்து வைத்ததும் பாதங்களை சுத்தம் செய்யவும். பாதங்களை மிதமான வெந்நீரில் வைத்து 10 நிமிடங்கள் ஊறவைத்து எடுக்க வேண்டும்.  

  • பிறகு இந்த கலவையை பாதங்களில் தடவி மெதுவாக தேய்த்து தேய்த்து மசாஜ் செய்தபடி தடவவும். கணுக்காலின் கீழிருந்து பாதங்களின் மேல் பகுதி கீழ்பகுதி என அனைத்து இடங்களிலும் இதை தடவி விட வேண்டும்.

  • பிறகு பாதத்தை கீழே இறக்காமல் வைத்திருந்து உலர்ந்ததும் வெதுவெதுப்பான நீரில் கழுவி சுத்தமான துணியால் ஒற்றி எடுத்து மாய்சுரைசர் தடவவும்.  

  • பாதங்களில் சுருக்கம் இல்லை முன்கூட்டி பராமரிப்பு என்றால் மாதத்துக்கு இருமுறை செய்தால் போதும் பாதங்களில் சுருக்கம் வந்தவர்கள் வாரத்துக்கு மூன்று முறையாவது இப்படி செய்ய வேண்டும். ஆண்கள், பெண்கள் அனைவரும் இதை செய்யலாம்.

  • அரிசி மாவு சுருக்கங்களை போக்குவதோடு பாதத்தை சுத்தம் செய்ய உதவும். தேன் பாதங்களில் கிருமிகள் இருந்தால் அதை வெளியேற்றிவிடும். ஆப்பிள் சீடர் வினிகர் பாதங்களில் வெடிப்புகளை போக்க உதவும்.   




Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!