நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

முடி நீளமாகவும் பளபளப்பாகவும் இருக்க வேண்டுமா? இதோ அசத்தலான டிப்ஸ் உங்களுக்காக

 பொதுவாக ஒருவரின் அழகை அதிகரித்து வெளிக்காட்டுவதில் முடி முக்கிய பங்கினை வகிக்கிறது. 


 ஆனால் அத்தகைய முடியானது தற்போது மாசுக்கள் நிறைந்த சுற்றுச்சூழல், வாழ்க்கை முறை மற்றும் பழக்கவழக்கங்களினால் அதிகம் பாதிக்கப்பட்டு, முடி கொட்டுதல், அடர்த்தி குறைதல் போன்றவை ஏற்படுகிறது. 

 அதுமட்டுமல்லாமல், இன்றைய நவீன காலத்தில் முடியைப் பராமரிக்க நிறைய பொருட்கள் வந்திருப்பதால், மக்கள் இயற்கை வழிகளை மறந்து செயற்கை வழிகளை பின்பற்ற ஆரம்பித்து, பின் அதனால் பல்வேறு பக்க விளைவுகளும் ஏற்படுகின்றன.

எனவே பக்கவிளைவுகளை சந்திக்கமால் இருக்க சில இயற்கை வழிகள் உள்ளன. தற்போது அதில் ஒன்றை பார்ப்போம்.  

 

தேவையானவை


  • பூந்திக்கொட்டை 8
  • சிகைக்காய் 6
  • நெல்லிக்காய் 4


செய்முறை


  • நெல்லிக்காயின் கொட்டையை நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி நீரில் ஊறவிடவும்.

  • பிறகு சிகைக்காய் பூந்திக்கொட்டை இரண்டையும் நீரில் ஊறவிடவும். காலையில் இதனை இலேசாக சூடாக்கி கொதி வரும் போது இறக்கி ஆறவிடவும்.

  • பிறகு இதை ப்ளெண்டரில் போட்டு அரைத்து வடிகட்டினால் ஷாம்பு போன்று வரும். அதனை கூந்தலுக்கு பயன்படுத்தலாம். 


நன்மைகள்


  • பூந்திக்கொட்டை கூந்தலுக்கு அதிகமாக நன்மைகளை தரும். முடியை ஆழமாக சென்று சுத்தப்படுத்தும் குணம் பூந்திக்கொட்டைக்கு உண்டு.

  • முடியின் மயிர்க்கால்கள் வலுப்பெற்று முடி உதிர்வதை கட்டுப்படுத்தும். முடி வேகமாக வளர்வதற்கும் பளபளப்பாக இருப்பதற்கும் பூந்திக்கொட்டை உதவுகிறது.

  • சீயக்காய் காலங்காலமாக கூந்தலுக்கு பயன்படுத்தி வரும் பொருள். இதில் உள்ள வைட்டமின் சி கூந்தலுக்கு அதிக நன்மை தரும்.




Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்