நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

பிரபலங்கள் பயன்படுத்தும் Dating App! ஒரு லட்சம் பேர் காத்திருப்பு.......

 பிரபலங்கள் மட்டுமே பயன்படுத்தும் டேட்டிங் ஆப் ஒன்றில் உறுப்பினராக சுமார் ஒரு லட்சம் பேர் காத்திருக்கின்றனர். 


  • பிரபலங்கள் மட்டுமே பயன்படுத்தும் டேட்டிங் ஆப்
  • ஒரு லட்சம் பேர் காத்திருப்பு
  • மாதம்தோறும் 8 டாலர் கட்டணம்.


டிஜிட்டல் யுகத்தில் செயலிகள் புழக்கத்துக்கு வந்தபிறகு சாட்டிங்கில் காதலர்களை தேடுவது இயல்பாகிவிட்டது. வீட்டில் இருந்தபடியே டேட்டிங் ஆப்பில் (Dating App) பிடித்தவர்களுடன் பழகத்தை ஏற்படுத்திக் கொண்டு, பழகும் பிரபலங்கள் மன ஒற்றுமை ஏற்பட்டால் திருமணத்ததையும், இல்லையென்றால் பிரிவையும் தேர்ந்தெடுக்கிறார்கள். டேட்டிங் செயலிகள் பல இருந்தாலும், ஹாலிவுட் முதல் பாலிவுட் வரை என பிரபலங்கள் உறுப்பினராக இருக்கும் ஒரு டேட்டிங் ஆப் மிகவும் பிரபலம். இந்த செயலியில் உறுப்பினராக சேருவதற்கு சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டார் காத்திருக்கின்றனர்.

ராயா செயலி (Raya App )

பென் அஃப்லெக், ட்ரூ பேரிமோர், ஜான்வி கபூர், வாணி கபூர் என பல பிரபலங்களும் இந்த செயலியை பயன்படுத்துகின்றனர். இந்த செயலி மூலம் தங்களுக்கான காதலரை தேடிப்பிடித்த அவர்கள், ரிலேஷன்ஷிப்பில் இருந்துள்ளனர். சிலர் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு புதியவர்களுடன் டேட்டிங் செய்துள்ளனர். இந்த செயலியின் விஷேஷம் என்னவென்றால், பணக்காரர்கள், பிரபலமானவர்கள் மட்டுமே ராயா டேட்டிங் செயலியை பயன்படுத்துகின்றனர். குறிப்பாக, சினிமாவில் இருக்கும் பல பிரபலங்கள் இந்த செயலி மூலம் தங்களுக்கான டேட்டிங் பார்ட்னரை தேடிப் பிடிக்கின்றனர். 

யாருக்கெல்லாம் கிடைக்கும்?

இந்த தகவலை பார்த்தவுடன் நீங்களும் ராயா டேட்டிங் ஆப்-ஐ பயன்படுத்தலாம் என்ற எண்ணம் வரும். ஆனால் இந்த டேட்டிங் செயலியை ஆப்பிள் ஐஓஎஸ் போன் வைத்திருப்பவர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். மேலும், இந்த செயலியை பயன்படுத்த விரும்பினால், உங்களின் சுயவிவரம் சரிபார்த்த பின்னரே பயன்படுத்த அனுமதிக்கப்படுவீர்கள். மேலும், சில கட்டுப்பாடுகளும் உள்ளன. அந்தக் கட்டுப்பாடுகளை மீறினால் உடனடியாக அந்த செயலியில் இருந்து வெளியேற்றப்படுவீர்கள்.


லேட்டஸ்டாக வெளியாகியிருக்கும் தகவலின்படி, ராயா செயலியை பத்து லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயன்படுத்துகின்றனர். சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் சுயவிவரக்குறிப்பை பதிவு செய்து அனுமதிக்காக காத்திருக்கின்றனர். 

கட்டணம் எவ்வளவு?

இந்த செயலியில் உறுப்பினராக இருப்பவர்கள் மாதந்தோறும் 8 டாலர் கட்டணமாக செலுத்த வேண்டும். ஆப்பிள் ஐபோன் பயன்படுத்துபவராக இருந்தால், உங்களுக்கான பார்ட்னரை தேடிப்பிடிக்க சரியான செயலியாக ராயா டேட்டிங் செயலி இருக்கும்.


ALSO READ : நீரில் மூழ்கிய பேய் கிராமம்: மீண்டும் வெளியே தெரியும் வைரல் காட்சி.......

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!