கூகுள் வெளியிட்டுள்ள ஆண்ட்ராய்டு 13! இவ்வளவு சிறப்பம்சங்களா?
- Get link
- X
- Other Apps
ஆண்ட்ராய்டு 13 டெவலப்பர் அப்டேட்டை கூகுள் வெளியிட்டுள்ள நிலையில் அதன் சிறப்பம்சங்கள் குறித்து தெரியவந்துள்ளது.
இதில் தரப்பட்டுள்ள நோட்டிஃபிகேஷன் பர்மிஷன் எந்தெந்த செயலியின் நோட்டிபிகேஷனகள் வர வேண்டும் என்பதை கட்டுப்படுத்துகிறது. குயிக் செட்டிங்க்ஸில் புதிய பிரைவசி ஷார்ட்கட் கொடுக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் கேமரா, மைக்ரோபோன், லோகேஷன் ஆகியவற்றின் பிரைவசியை எளிதாக மாற்றிகொள்ள முடியும்.
ஆண்ட்ராய்டு 13-ல் கொடுக்கப்பட்டுள்ள புதிய மீடியா பிளேயர், அவுட்புட் பிக்கர் சிறப்பான டிசைனில் வந்துள்ளன. இதன் யூ.ஐ மூலம் எளிதாக இசை மற்றும் ப்ளூடூத் ஸ்பீக்கர்களை கட்டுப்படுத்த முடியும்.
ஆண்ட்ராய்டு 12எல்-ல் நீகப்பட்ட டச் இண்டிகேட்டர்கள் ஆண்ட்ராய்டு 13-ல் மீண்டும் கொடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நாம் ஸ்க்ரீன் ரெக்கார்ட் செய்யும்போதே டச்சை எனாபிள் செய்ய முடியும்.
கூகுள் டிஸ்பிளே மற்றும் ஃபாண்ட் சைஸ் ஆப்ஷன் இரண்டையும் ஒரே மெனுவின் கீழ் கொண்டுவந்துள்ளது. இதன்மூலம் நாம் சாதனத்தின் டிஸ்பிளே சைஸை மாற்றிக்கொள்ள முடியும்.
ALSO READ : புதிய சேவையை வழங்கப்போகும் டாடா... இனி பணம் அனுப்புவது ஈசி!
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment