நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

ஊளைச்சதையும் கொழுப்பையும் கரைத்து விரட்டும் சூப்பர் பவர் கொண்ட பானம்... 5 நிமிடத்தில் ரெடி!

 உடல் பருமனில் ஊளை சதை என்று சொல்வார்கள்.


வலிமையில்லாமல் வெறும் சதை மட்டும் இருக்கும். நீர் உடம்பு என்றும் சொல்வதுண்டு. உப்புதான் உடலில் ஊளை சதை போடுவதற்கு மிக முக்கிய காரணம்.

உப்பானது நீரை சேர்த்து வைத்துக் கொள்ளும் குணமுடையது.

இந்த உடல் பருமன் கொண்டிருப்பவர்கள் உடல் எடையை குறைக்க கொள்ளுப்பால் உதவியாக இருக்கும்.

இந்த கொள்ளுப்பால் வீட்டில் தயாரிக்கும் முறை எப்படி என்பதை அறிந்துகொள்வோம். 


கொள்ளுப்பால் தயாரிக்கும் முறை


தேவையான பொருட்கள்


  1.   கொள்ளு - 100 கிராம் (ஒருவருக்கு 100 கிராம் அளவு தேவை)
  2. தேங்காயத்துருவல் - 2 டீஸ்பூன் அளவு

செய்முறை


கொள்ளில் கல் இருக்கும் அதை போக்கி சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பிறகு கொள்ளை 12 மணி நேரம் வரை ஊறவிடவும்.

அதன் பிறகு அதை வெள்ளைத்துணியில் முளைக்கட்ட வேண்டும்.

முளைகட்டிய துணியில் 12 மணி நேரம் கழித்து பார்த்தால் முளை1-1.5 செ.மீட்டர் அளவு வளர்ந்த பிறகு அதை எடுத்து சிறிது சிறிதாக மிக்ஸியில் இட்டு, தேங்காய்த்துருவல் சேர்த்து அரைக்கவும்.

நன்றாக அரைந்ததும் எடுத்து மெல்லிய துணி உதவியுடன் அந்த பால் பிழிந்து கொள்ளவும். இந்த பாலை அப்படியே குடிக்கலாம்.

 உடல் பருமனாக உள்ள இளவயதினர் முதல் நடுத்தர வயதினர் வரை 100 கிராம் அளவு கொள்ளை அளவாக எடுக்கலாம்.

சிறு பிள்ளைகளுக்கு 50 கிராம் அளவில் கணக்கிட்டு கொடுக்கலாம். ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே குடிக்க வேண்டும். அதிகமாக எடுக்க வேண்டாம். முதலில் வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் எடுக்க வேண்டும். கொள்ளு உஷ்ணம் தரக்கூடியது.

பிறகு படிப்படியாக வாரத்தில் நான்கு அல்லது ஐந்து நாட்கள் வரை எடுக்கலாம்.



ALSO READ : உதடுகள் சிகப்பழகு பெற இயற்கை வழிகளை பின்பற்றுவது எப்படி?

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!