நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

கூகுள் சர்ச் டிரிக்ஸ்… இந்த 7 விஷயம் தெரிஞ்சா ரொம்ப ஈஸி

 கூகுள் தேடலில் சிறந்த முடிவை காண இந்த 7 சர்ச் டிரிக்ஸை ஃபாலோ செய்ய வேண்டும்.


கூகுள் பொய் சொல்லாது என்கிற டிஜிட்டல் உலகில் நாம் பயணித்துக்கொண்டிருக்கிறோம். எத்தனை பேர் அருகில் இருந்தாலும், டவுட் வந்தால் கூகுளை தான் தேடி செல்வோம். அத்தகை கூகுள், சில டிரிக்ஸை ஃபாலோ செய்தால், நமது தேடலுக்கான விடையை விரைவாகவும் சரியாகவும் கண்டறிய முடியும்.

டைம் பில்டர் வைத்தல்

கூகுள் சர்ச் ரிசல்டில் டைம் பில்டர் என்ற ஆப்ஷன், All, news, shopping,images என்கிற கேட்டகரி உள்ள இடத்தில் உள்ளது. அந்த ஆப்ஷன் எப்போதும் Any time என செட் செய்யப்பட்டிருக்கும். எனவே, நீங்கள் கூகுலில் தேடுகையில் உங்கள் தேவைக்கு ஏற்ப, last hour, last week, last month என்கிற விருப்பங்களை செலக்ட் செய்து சேர்ச் செய்தால் சரியான பதிலை கண்டறிய முடியும்.



துல்லியமான ரிசலட்-க்கு quotation mark (“ ”)

கூகுள் சர்ச் பாக்ஸில் நீங்கள் டைப் செய்தால், பரந்த அளவிலான ரிசல்டை காண்பீர்கள். இது மிகவும் நல்லது என்றாலும், சில நேரங்களில் குறிப்பிட்ட ஒரு விடையை காண உபயோகம் ஆகாது. உதாரணமாக பாட்டின் வரிகளை மட்டுமே தேடுகையில், கண்டுபிடிப்பது கடினம். எனவே, நீங்கள் டைப் செய்த வாக்கியத்தில், ரிசல்ட்-க்கு தேவையான முக்கிய வார்த்தைகளுக்கு முன்பும் பின்பும் quotation mark (“ ”) பதிவிட வேண்டும்.

குறிப்பிட்ட தளங்களின் ரிசல்டை தேட Colon உபயோகித்தல்

குறிப்பிட்ட இணையதளத்தின் பக்கங்களை மட்டும் தேடுவதற்கான வாய்ப்பை கூகுள் அனுமதிக்கிறது. இந்த தேடலில் மற்ற பக்கங்களின் ரிசல்ட் தோன்றாது. உதாரணமாக, நீங்கள் தேட விரும்புவதை டைப் செய்ததும், ஒரு ஸ்பேஸ் விட்டு site:xyz.com என டைப் செய்து சர்ச் செய்ய வேண்டும் (இதில் xyz இடத்தில் நீங்கள் தேட விரும்பும் இணையதளத்தின் பெயரை பதிவிட வேண்டும்.


உதாரணமாக, தி இந்தியன் எக்ஸ்பிரஸில் Galaxy S22 Ultra ஸ்மார்ட்போன் குறித்த செய்திகளை அறிய, கூகுள் சர்ச் பாக்ஸில் ‘Galaxy S22 Ultra site:indianexpress.com’ என டைப் செய்ய வேண்டும்.

கால்குலேட்டர், கரண்சி மாற்றம்

கூகுள் சர்ச் பார் மூலம் எளிதாக கால்குலேட் செய்ய முடியும். நீங்கள் ஜஸ்ட் சர்ச் பாக்ஸில் 82 divided by 3 அல்லது 56+ 102 என டைப் செய்தால் போது, ரிசல்டை விரைவாக காணமுடியும். இதுதவிர, சர்ச் பார் மூலம் இந்த கரண்சிக்கு வேறு நாட்டு பணத்திற்கான மதிப்பீட்டை எளிதாக கண்டறியலாம். உதாரணமாக, 80 அமெரிக்க டாலரின் இந்திய மதிப்பை கண்டறிய INR என டைப் செய்ய வேண்டும்.

பீரியாடிக் டேபிள்

கூகுள் சேர்ச் மூலம், பீரியாடிக் டேபிளை எளிதாக திரையில் கொண்டு வரலாம். கூகுள் பீரியாடிக் டேபிளில் புதுப்பிக்கப்பட்டு உலோகங்களின் மதிப்புகள் இடம்பெற்றிருக்கும். அந்த டேபிளை கீழே காணலாம்.


இதுதவிர டேபிள் வலது பக்கத்தில் Practice Problems’ என்ற வசதி கொடுக்கப்பட்டுள்ளது. சில எளிய கேள்விகளுடன் பீரியாடிக் டேபிள் குறித்து எளிதாக கற்றுக்கொள்ளலாம்.

திரைப்படம் ஓடும் தியேட்டர்

நீங்கள் தேட விரும்பும் திரைப்படம் அல்லது டிவி நிகழ்ச்சியின் பெயரை தொடர்ந்து Watch என டைப் செய்தால் போது, அவை எங்கு ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது என்பதை கண்டறிய முடியும்.

Fun தேடல்கள்

Wordle – வேர்ட்லே ஈஸ்டர் முட்டை

Askew – ரிசல்ட் அனைத்தும் சாய்ந்தப்படி இருக்கும்

Blink HTML – Blink அண்ட் HTML வார்த்தைகள் திரையில் பிளிங்க் ஆகும்

Do a barrel roll – 360 டிகிரியில் திரை சுற்றும்

Google in 1998 – பழைய கூகுள் வெர்ஷன்

Sonic the Hedgehog game – அனிமேஷன் சோனிக் கேம் ஈஸ்டர் எக்

Super Mario Bros. 1985 – மரியோ ஈஸ்டர் முட்டை.



ALSO READ : நீங்கள் அதிக நேரம் கம்ப்யூட்டரில் வேலை பார்க்கும் நபரா?.கண்கள் பாதிக்காமல் இருக்க இதே சில எளிய வழிகள்

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்