நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

பொடுகு தொல்லை பாடாய்படுத்தி எடுக்குதா? இதனை எப்படி எளிய முறையில் போக்கலாம் தெரியுமா?

 பொதுவாக ஆண்கள், பெண்கள் இருவருக்கும் இருக்கும் ஒரே பிரச்சனை பொடுகு தொல்லை தான்.


வறண்ட சருமம், ஹார்மோன்களின் அளவில் ஏற்படும் மாறுபாடு, பூஞ்சை போன்ற நுண்ணுயிரித் தொற்றுகள், மனஅழுத்தம், முறையற்ற உணவுப் பழக்கம், தலையைச் சுத்தமாகப் பராமரிக்காதது போன்றவை பொடுகுப் பிரச்னை உருவாக முக்கியக் காரணங்கள்.

இந்த பிரச்சனையை ஆரம்பத்திலேயே கவனிக்க வேண்டியது மிகவும் அவசியம். இல்லை என்றால் முடி அதிகமாக உதிர ஆரம்பித்துவிடும். அந்தவகையில் பொடுகை விரட்ட உதவும் சில எளிய வழிமுறைகளை இங்கே பார்ப்போம்.


  • 3 அல்லது 4 தேக்கரண்டி தேனைப் பயன்படுத்தி ஒரு ஹேர் மாஸ்க் தயார் செய்து அதனுடன் அரை எலுமிச்சை சாற்றை பிழிந்து உங்கள் உச்சந்தலையில் சமமாக தடவவும், அல்லது பொடுகு பாதிப்புக்குள்ளான பகுதியில் மட்டும் தடவவும். 15 நிமிட மென்மையாக மசாஜ் செய்த பிறகு தலைமுடியைக் தண்ணீரில் அலசுங்கள்.

  •  வேப்ப எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெயை சம பாகங்களில் சேர்த்து உச்சந்தலையில் தடவிய பின் மெதுவாக மசாஜ் செய்யவும். பிறகு ஒரு மைல்டு ஷாம்பூவுடன் உங்க தலை முடியை நன்கு அலசவும். வேம்பு மற்றும் தேங்காய் எண்ணெய்யின் நற்குணங்கள் உங்கள் தலைமுடிக்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுக்கும்.

  • . தயிருடன் சிறிதளவு எலுமிச்சை சாற்றை கலந்து அதனை உச்சந்தலையில் தடவவும். அரை மணி நேரம் கழித்து ஷாம்பூவில் தலையை அலச வேண்டும். இதனை தொடர்ந்து செய்து வருவதால் பொடுகு தொல்லை விரைவில் நீங்கும். தலை பொடுகு தவிர்க்க வேண்டுமானால் சூடான தண்ணீரில் தலைகுளிப்பதை தவிர்க்க வேண்டும்.

  • தேங்காய் எண்ணெயில் வெந்தயத்தை சேர்த்து காய்ச்சி, தலையில் தேய்த்து வந்தால், பொடுகு பிரச்சனை கண்டிப்பாக நீங்கும். அடுத்ததாக வாரம் ஒருமுறை, மருதாணி இலையை அரைத்து, சிறிதளவு தயிர் மற்றும் எலுமிச்சைசாறு கலந்து தலையில் தேய்த்து சிறிது நேரம் ஊற வைத்து பின்னர் தலையை அலசுங்கள்.





Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!