இன்டர்நெட் வேகத்தை மின்னல் வேகத்தில் அதிகரிக்கனுமா? இதோ சூப்பர் ஐடியா
- Get link
- X
- Other Apps
கொரோனா பெருந்தொற்று காலத்தில் வீட்டில் இருந்தே பணிபுரியும் கலாச்சாரம் வந்த பிறகு இன்டர்நெட் என்பது அத்தியாவசிய தேவையாக மாறி விட்டது.
தற்போதைய மார்க்கெட்டில் எது சிறந்த நெட்வொர்க் என நீங்கள் பார்த்து, பார்த்து தேர்வு செய்திருந்தாலும் கூட, மோசமான நெட்வொர்க் சேவை அல்லது குறைவான இன்டர்நெட் வேகம் என்ற பிரச்சினைகளை உங்களால் தவிர்க்கவே இயலாது.
இத்தகைய சூழலில், வீட்டில் இருந்தபடியே, உங்கள் இன்டர்நெட் வேகத்தை நீங்களே அதிகரித்துக் கொள்வதற்கான சில டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.
- ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் ஒரே சானலில் வைஃபை வசதியை பயன்படுத்தும்போது இன்டர்நெட் வேகம் குறைந்து விடும். ஆகவே, உங்கள் ஸ்மார்ட்ஃபோன் அல்லது கம்ப்யூட்டரில் உள்ள ரவுட்டரை சரிபார்க்கவும். மிக குறைவான யூசர்கள் உள்ள சானலுக்கு மாறி கொள்ளவும்.
- பெரும்பாலான ரவுட்டர்களில் இரண்டு ஃப்ரிக்வன்சிகள் வழங்கப்படும். அதாவது, 2.4 GHZ மற்றும் 5 GHZ. பொதுவாக, 2.4 GHZ இணைப்பில் இணைய வேகம் குறைவாகவும், அதே சமயம் சிக்னல் பலம் வலுவாகவும் இருக்கும். தொலைதூரத்தில் இருக்கும் சமயத்தில் இதன் மூலமாக கணெக்ட் செய்து கொள்ளலாம்.
- 5 GHZ என்பது சிக்னல் அளவில் வலுவற்றதாக இருக்கும். ஆனால், இணைய வேகம் அதிகமாக கிடைக்கும்.
- 2.4 GHZ மற்றும் 5 GHZ சிக்னல்களை வழங்குவதற்கு தனித்தனி நெட்வொர்க் இணைப்புகள் உங்கள் ரவுட்டரில் செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும்.
முக்கிய குறிப்பு
உங்கள் ரவுட்டர் மிக சரியான இடத்தில் இருந்தால் தான், சிக்னல் முறையாக கிடைக்கும்.
ஆகவே, அது சரியான இடத்தில் இருக்கிறதா என்பதை உறுதி செய்யவும்.
எலெக்ட்ரானிக் குறுக்கீடு ஆகும் வகையில் டிவி, ப்ளூடூத் ஸ்பீக்கர், பேபி மானிட்டர், கேம்ஸ் சாதனம், கிட்சன் சாதனங்கள் ஆகியவற்றுக்கு அருகாமையில் ரவுட்டரை வைக்க கூடாது.
தரை மட்டத்தில் இருந்து 5 அடி உயரத்தில் வைப்பது சிறந்த தீர்வாக இருக்கும்.
வீட்டின் மையப் பகுதியில் இதை வைத்துக் கொள்ளலாம்.
அதுமட்டுமன்றி, வீட்டில் உள்ள வேறொரு ஃபோன் லைன் மூலமாக அதை கனெக்ட் செய்து கொள்ளலாம்.
ALSO READ : செல்போனில் Youtube வீடியோ பார்ப்பீர்களா? அப்போ இது உங்களுக்கு தான்
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment