நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

எவ்வளவு பெரிய்ய்ய்ய மீன்.. ‘வாழும் டைனோசரை’ பார்த்து அதிர்ந்த மீனவர்..!!

 கனடாவைச் சேர்ந்த யுவெஸ் பிஸ்ஸான் என்ற மீனவர் சமீபத்தில் பிரிட்டிஷ் கொலம்பியாவில் மீன்பிடிக்கச் சென்ற போது தனது வாழ்க்கையில் இது வரை கண்டிறாத  அளவில், மிகவும் பிரமிப்பை ஏற்படுத்தும் வகையிலான ஒரு மீனை கண்டார். 


கனடாவைச் சேர்ந்த யுவெஸ் பிஸ்ஸான் என்ற மீனவர் சமீபத்தில் பிரிட்டிஷ் கொலம்பியாவில் மீன்பிடிக்கச் சென்ற போது தனது வாழ்க்கையில் மிகவும் பிரமிப்பை ஏற்படுத்தும் வகையிலான ஒரு மீனை கண்டார். அவர் 'வாழும் டைனோசர்' என்றும் அழைக்கப்படும் 10.5 அடி நீளமுள்ள ஒரு பிரமாண்டமான ஸ்டர்ஜன் என்னும் பிரம்மாண்ட மீனை கண்டார் . தான் இதுவரை கண்டிராத பெரிய ஸ்டர்ஜன்களில் இதுவும் ஒன்று என்று மீனவர் கூறினார்.

அவர் 250 கிலோ எடையுள்ள மீனைக் கண்டுபிடித்ததைக் காட்டிய ஒரு வீடியோ, மிக வேகமாக TikTok செயலியில் வைரலானது. கேமராவை நோக்கி ஸ்டர்ஜனின் தலைக்கு எடுத்து காட்ட அவர் சிரமப்படுவதை வீடியோவில் காணலாம். "இதைப் பாருங்கள், இந்த மீன் 10 மற்றும் அரை அடி, அநேகமாக 500, இல்லை 600 பவுண்டுகள் இருக்கும்" என்று வைரல் வீடியோவில் அவர் கூறுகிறார்.

அது கைப்பற்றப்பட்டு அளவிட்ட, ​​மீன்பிடி வழிகாட்டிகள் ஸ்டர்ஜனை RFID சிப்பில் குறியிட்ட பிறகு அதை மீண்டு நீருக்குள் விடுவித்தனர்.  இதற்கு முன்னர், இந்த மீன் கண்ணில் தென்படவில்லை எனவும் அவர்கள் ஆச்சர்யமாக கூறினர்.

ட்விட்டர் போன்ற பிற தளங்களிலும் வீடியோ மிகவும் வைரலானது. வைரலான வீடியோவை கீழே காணலாம்:

Yves Bisson கனடாவின் ஃப்ரேசர் நதியில் வாழும் மீனவர். இவர் ஸ்டர்ஜன் வகை மீன்களில் நிபுணர். தனது கண்ணில் பட்ட ஸ்டர்ஜன் மீனுக்கு 100 வயது இருக்கலாம் என்கிறார் அவர்.


also read : பாகுபலி அளவிற்கு மறைந்து இருக்கும் அட்லாண்டிஸ் தீவின் ரகசியங்கள்!


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!