ஆன்லைனில் இருக்கும்போது வாட்ஸ்அப்பில் வரும் மெசேஜ்களை நிராகரித்து ஆஃப்லைனில் இருப்பது போல காண்பிக்கலாம்.
ஆண்ட்ராய்டு அல்லது ஐபோனில் மொபைல் டேட்டாவை ஆஃப் செய்யாமல் ஒரு சில வழிமுறைகளை பயன்படுத்தி வாட்ஸ்அப்பை ஆஃப்லைனில் இருப்பது போல காண்பிக்க முடியும். இதைச் செய்வதன் மூலம், உங்கள் பார்ட்னர் அல்லது நண்பர்கள் நீங்கள் வாட்ஸ்அப் பயன்படுத்துவதை பார்க்கமுடியாது, அதனால் நீங்கள் எவ்வித இடையூறும் இல்லாமல் மொபைலை பயன்படுத்தலாம். தற்போது வாட்ஸ்அப் மிகவும் பிரபலமான ஒரு செயலியாக மாறிவிட்டது, இதனை மெசேஜ் செய்ய பயன்படுத்திய காலம் போயி தற்போது பலரின் விருப்பமான ஒன்றாக இந்த செயலி மாறிவிட்டது. வாட்ஸ்அப்பில் நாம் மெசேஜ் செய்கிறோமோ இல்லையோ சாதாரணமாக வாட்ஸ்அப்பை ஆன் செய்தாலே நாம் ஆன்லைனில் இருப்பது மற்றவர்களுக்கு காட்டிவிடுகிறது. அப்படி நீங்கள் ஆன்லைனில் இருக்கும் சமயத்தில் யாரேனும் உங்களுக்கு மெசேஜ் அனுப்பினால் நீங்களும் பதிலுக்கு மெசேஜ் அனுப்பவேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஏற்படும்.
ஆனால் சில சமயங்களில் நமக்கு சிலரது மெசேஜ்களுக்கு பதிலளிக்க விருப்பம் இருக்காது, இதனாலேயே பலரும் ஆன்லைனில் இருப்பதாய் மறைக்க விரும்புகின்றனர். ஆன்லைனில் இருந்துகொண்டே பதிலளிக்காமல் இருந்தால் சிலருக்குள் பிரச்சனை ஏற்படும், இவ்வாறு பல தொந்தரவுகள் பலருக்கும் இருக்கிறது. இப்போது எவ்வாறு நாம் ஆன்லைனில் இருக்கும்போது வாட்ஸ்அப்பை ஆப்லைனில் இருப்பது போல காமிக்கலாம் என்பதை பற்றி பார்ப்போம். "ஜிபிவாட்ஸ்அப்" என்பதை பலரும் கேள்விப்பட்டிருப்போம், வாட்ஸ்அப்பின் மாறுபாடு தான் இந்த ஜிபி வாட்ஸ்அப். இந்த செயலி தான் வாடிக்கையாளர்களுக்கு ஆப்லைன் மோட் வசதியை வழங்குகிறது.
இந்த செயலியை பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்யமுடியாது, இதனை இணையத்திலிருந்து ஏதேனும் வெப்சைட் மூலம் தான் பதிவிறக்கம் செய்யலாம். இதனை பதிவிறக்கம் செய்த பிறகு முதலில் 'பிரைவசி செட்டிங்ஸ்' என்கிற ஆப்ஷனுக்கு செல்ல வேண்டும், பின்னர் 'கன்ஸீல் ஆன்லைன் ஸ்டேட்டஸ்' என்பதை தேர்வு செய்யவேண்டும். இதனை செய்த பிறகு உங்கள் கான்டெக்ட்டுகளில் உள்ளவர்கள் யார் பார்த்தாலும் நீங்கள் ஆன்லைனில் இருப்பது அவர்களுக்கு காண்பிக்காது. இதில் முக்கியமான ஒன்று என்னவென்றால், நீங்கள் இந்த வசதியை பயன்படுத்திய பிறகு நீங்கள் ஆன்லைனில் இருப்பதை மற்றவர்களால் எப்படி காண முடியாதோ அதேபோல மற்றவர்கள் ஆன்லைனில் இருப்பதை உங்களால் பார்க்க முடியாது.
மேலும், ஐபோனை பொறுத்தவரை, இது மிகவும் எளிமையானது. செட்டிங்க்ஸை திறந்து ஸ்க்ரோல் டவுன் செய்து அதில் வாட்ஸ்அப்பைக் கிளிக் செய்ய வேண்டும், பின்னர் 'பவுண்டேஷன் ஆப் ரெப்ரெஷ்' மற்றும் 'வெர்சடைல் டேட்டா'வை தேர்வு செய்தபின் இந்த வசதி இயங்க ஆரம்பிக்கும். மீண்டும் வாட்ஸ்அப்பை இயக்க நீங்கள் அந்த செட்டிங்க்ஸை மூட வேண்டும், அதன் பின்னரே நீங்கள் ஆன்லைனில் இருப்பது மற்றவர்களுக்கு தெரியும்.
Comments
Post a Comment