நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

முகநூலில் உளவு பார்ப்பவர்களை தடுப்பது எப்படி? எளிமையான டிப்ஸ்

 முகநூலில் உங்களுக்கு வேண்டாதவர்கள், உங்களின் அப்டேட்டுகளை தெரிந்து கொள்வதை எளிமையாக தடுக்கலாம். 

  • பேஸ்புக் புரோஃபைல் கண்காணிக்கப்படுகிறதா?
  • இதனை தடுக்க விரும்பும் உங்களுக்கான டிப்ஸ்
  • பேஸ்புக் செட்டிஙஸில் சிறிய மாற்றம் செய்யுங்கள்

Facebook கோடிக்கணக்கான இந்தியர்கள் பயன்படுத்துகின்றனர். இந்தியாவில் பேஸ்புக் 300 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைக் கொண்டுள்ளது. அதில் இருக்கும் வாடிக்கையாளர்களுக்கும் புரோஃபைல் பாதுகாப்பு என்பது அவசியம்.  முறையாக பயன்படுத்தாவிட்டால் ஹேக்கர்கள் மற்றும் வேண்டாவதர்களிடம் உங்களின் தகவல்கள் சென்று சேர்ந்துவிடும். 

அதனை நீங்கள் தடுக்க விரும்புபவர்களுக்கு புரோஃபைல் லாக் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை பயன்படுத்திக் கொள்ள பேஸ்புக் கொடுக்கிறது. அதனை எப்படி பயன்படுத்துவது, உபயோகிப்பது? என தெரியாதவர்களுக்கான டிப்ஸ் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. 

Facebook Profile Lock என்றால் என்ன?

Facebook Profile Lock ஆப்சன் மூலம், உங்கள் கணக்கையும் சுயவிவரப் புகைப்படத்தையும் லாக் செய்து வைக்கலாம். இந்த அம்சத்தின் மூலம், உங்கள் புரோஃபைல் தகவல்கள் பாதுகாப்பாக இருக்கும். உங்கள் நண்பர் பட்டியலில் இல்லாதவர்கள் உங்கள் புரோஃபைலைப் பார்க்க முடியாது.  இதுதவிர ஏனைய தகவல்களும் மற்றவர்கள் பெற முடியாது. 

நன்மைகள் என்ன?

உங்கள் தனிப்பட்ட டேட்டாவானது Facebook Profile Lock அம்சத்துடன் பாதுகாக்கப்படும். உங்கள் புகைப்படங்களையும் உள்ளடக்கத்தையும் யாராலும் திருட முடியாது. தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் ஐடி போன்ற உங்கள் தொடர்பு விவரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்.

எப்படி லாக் செய்வது?

* முதலில் உங்கள் Facebook பயன்பாட்டிற்குச் சென்று உங்கள் புரோபைலுக்கு செல்ல வேண்டும்

* பின்னர் 'புரோபைல் சேஞ்ச்' விருப்பத்திற்கு அடுத்துள்ள மூன்று-புள்ளிகள் ஐகானைக் கிளிக் செய்யவும்

* இப்போது, ​​லாக் ப்ரொஃபைல் ஆப்ஷனைப் தேர்ந்தெடுத்து அதனுள் செல்லவும்

* அதன் பிறகு, Facebook Profile Lock அம்சத்தின் நன்மைகள் என்ன என்பது உங்களுக்கு காண்பிக்கபடும். 

* கடைசியாக, உங்கள் கணக்கை லாக் செய்வதற்கு 'உங்கள் புரோஃபைலை லாக் செய்க' என்ற விருப்பத்தை கிளிக் செய்யவும்.


also read : ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக கோடிகளை சம்பாரித்த டாப் வீரர்கள் - இத்தனை கோடியா?


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!