நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

பெண்களுக்கு எமனாக மாறும் ஜங்க் ஃபுட்.

உணவு விஷயத்தில் ஆண் - பெண் என்ற வேறுபாடெல்லாம் தேவையில்லை. ஒருவருக்கு உயரத்துக்கு ஏற்ற உடல் எடை இருக்க வேண்டும். அதற்கு அதிகமாகவோ, குறைவாகவோ இருக்கக் கூடாது. அதற்கேற்ப சாப்பிட வேண்டும். உடல் எடையைப் பராமரிக்கக்கூடிய அளவுக்குச் சாப்பிடலாம்.

முடிந்தவரை துரித உணவுகள், இனிப்புகளைத் தவிர்க்க வேண்டும்.

எண்ணெயில் பொரித்த உணவுகளை அதிகமாகச் சாப்பிடக் கூடாது.

சமோசா, பர்கர், பீட்சா, ஃப்ரைடு ரைஸ், சிக்கன் ரைஸ் போன்றவற்றைக் கடையில் வாங்கிச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

பெண்களின் சிறுநீரகம், கல்லீரல் போன்ற பல உள்ளுறுப்புகள் அளவில் சிறியதாகவும், குறைந்த அளவு செயல்பாட்டிலும் இருக்கும்.

ஹார்மோன், என்சைம் சுரப்பும்கூட ஆண்களைவிட குறைவாகத்தான் இருக்கும். அதனால்தான் `துரித உணவுகளை உட்கொள்ளும்போது பெண்களை பல நோய்கள் எளிதாகத் தாக்குவதற்கு வாய்ப்பு உண்டு.


Comments

Popular posts from this blog

பசிச்சா எடுத்துக்குங்க...' - 20 ரூபாய் பிரியாணி; காசு இல்லைன்னா FREE பிரியாணி!

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...