சக்தி மிக்க ஆன்டிஆக்சிடென்ட் ஊட்டச்சத்து பல்வேறு பழங்கள் மற்றும் காய்கறிகளில் காணப்படுகிறது, அவற்றுள் ஒன்று சிவப்பு மிளகாய். சிவப்பு மிளகாய் பற்றி உங்களுக்குத் தெரியாத சுவாரஸ்ய விஷயங்களை பார்க்கலாம்.
மிகவும் பாதுகாப்பான மற்றும் சிறந்த ஊட்டச்சத்துகளில் ஒன்றாக அறியப்படுவது வைட்டமின் சி சத்து. இது நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு ஆதரவாக செயல்படுகிறது மற்றும் உடலை செயல்பாட்டுடன் வைத்து கொள்ள உதவுகிறது. இந்த சக்தி மிக்க ஆன்டிஆக்சிடென்ட் ஊட்டச்சத்து பல்வேறு பழங்கள் மற்றும் காய்கறிகளில் காணப்படுகிறது, அவற்றுள் ஒன்று சிவப்பு மிளகாய். இந்த சிவப்பு மிளகாய் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டது.
ஒற்றைத்தலைவலி மற்றும் அதனால் ஏற்படும் வலியைக் குறைக்க உதவுகிறது, சளிக்கான அறிகுறிகளைக் குறைகிறது, மேலும் உங்கள் ஆயுட்காலத்தை நீட்டிக்க உதவுகிறது. மேலும் ஆரஞ்சு பழத்தை விட அதிக அளவு வைட்டமின் சி சத்தை சிவப்பு மிளகாய் கொடுக்கிறது. சிவப்பு மிளகாய் 3க்கு 1 என்ற அளவில் நோயெதிர்ப்பு அதிகரிக்கும் ஊட்டச்சத்துகளை வழங்கி ஆரஞ்சு பழத்தை வெற்றி கொள்கிறது. அரை கப் நறுக்கிய சிவப்பு மிளகாயில் 107.8 மிகி அளவு வைட்டமின் சி சத்து உள்ளது.
சிவப்பு மிளகாயில் வைட்டமின் சி சத்து உயர்ந்த அளவு உள்ளது. இதனால் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமை அடைகிறது, மேலும் இதய நோய் போன்ற நாட்பட்ட உடல் பாதிப்புகளுக்கான அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. சிவப்பு மிளகாயில் வைட்டமின் ஏ, பி, ஈ, கே , தாமிரம், பொட்டாசியம் போன்ற இதர சத்துக்கள் உள்ளன. மேலும் சிவப்பு மிளகாயில் பல்வேறு இதர தாவர கூறுகள் உள்ளன. அவைகள் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளன. மிளகாய்க்கு கார தன்மையை வழங்கும் காப்சைசின் என்பது ஒரு ஆன்டிஆக்சிடெண்ட் தாவர கூறாகும்.
குடல் புற்றுநோய், கல்லீரல் புற்றுநோய், நுரையீரல், கணையம், லுகேமியா போன்ற 40 வகையான புற்றுநோயுடன் தொடர்புடைய அணுக்களை அழிக்க இந்த அற்புதமான ரசாயனம் உதவுவதாக சில ஆய்வு கூட ஆராய்ச்சிகள் குறிப்பிடுகின்றன. புற்றுநோய் அணுக்களுடன் தொடர்புடைய சில மரபணுக்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதையும் அவற்றை வளரவிடாமல் தடுப்பதையும் காப்சைசின் மாற்றக்கூடும் என்று சில ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர் . இருப்பினும், சில ஆய்வுகள் மிளகாய் உட்கொள்வதால் புற்றுநோய் பாதிப்பு அதிகரிப்பதாக கூறுவதால், இது குறித்த கூடுதல் ஆராய்ச்சி தேவைப்படுகிறது.
சிவப்பு மிளகாய் குறித்த முக்கிய குறிப்புகள் :
1. சிவப்பு மிளகாயில் பல்வேறு ஊட்டச்சத்துகள், ஆன்டிஆக்சிடெண்ட் மற்றும் வைட்டமின் சி சத்து ஆகியவை உள்ளன. இவை அனைத்தும் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றன.
2. சிவப்பு மிளகாய் உலகின் பெரும் பகுதிகளில் பயன்படுத்தப்படும் ஒரு மசாலா பொருள். சிவப்பு மிளகாயில் உள்ள காப்சைசின் என்னும் பயோஆக்டிவ் என்னும் உயிரிமுனைப்புக் கொண்ட ஒரு தாவர கூறு பல்வேறு அற்புத ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டது.
3. இந்த பிரபலமான மசாலாப்பொருள் சேர்க்கப்பட்ட உணவு நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தவும், எடை இழப்பை ஊக்குவிக்கவும், ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
உலகம் முழுவதிலும் மிகப் பிரபலமான ஒரு உணவுபொருள் சிவப்பு மிளகாய். இவற்றில் வைட்டமின், மினரல் மற்றும் ஆன்டிஆக்ஸிடெண்ட் போன்றவை அதிகம் இருப்பதால், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, வளர்சிதை மாற்றத்தை வேகப்படுத்தி, அழற்சியை எதிர்த்து போராடுகிறது. சிவப்பு மிளகாய் ஒரு இயற்கையான நுண்ணுயிர் எதிர்ப்பியாகும், அதாவது உணவை பாழ்படுத்தும் கிருமிகள் மற்றும் நுண்ணுயிர்களை கொல்லும் தன்மைக் கொண்டவை. இதனை உங்கள் உணவில் இணைத்துக் கொள்வது என்பது ஒரு ஆரோக்கியமான தேர்வாகும்.
Comments
Post a Comment