நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

குதூகலமாக அணிவகுத்து வந்து போலார் கரடியை கண்ட பென்குயின்களின் காட்சி காண்போரை கவர்ந்தது.

அமெரிக்காவின் Missouri பகுதியில் உள்ள செயிண்ட் லூயிஸ் உயிரியல் பூங்காவில் பென்குயின்கள் கூட்டமாக அணிவகுத்து வந்து போலார் கரடியை கண்ட காட்சி காண்போரை வெகுவாக கவர்ந்துள்ளது.
அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு நிலவி வரும் சூழலில் நாட்டின் பல பகுதிகள் பனியால் சூழ்ந்து வெண்ணிற ஆடையை போர்த்தியது போல் காணப்படுகிறது. இந்நிலையில் லூயிஸ் உயிரியல் பூங்காவில் பென்குயின்கள் குதூகலமாக அணிவகுத்து போலார் கரடியை கண்ட காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.


Comments

Popular posts from this blog

பசிச்சா எடுத்துக்குங்க...' - 20 ரூபாய் பிரியாணி; காசு இல்லைன்னா FREE பிரியாணி!

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...