நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

மலேசியாவில் பாண்டாவை சவாரிக்கு அழைத்து சென்ற ஃபுட்பாண்டா டெலிவரி பாய் - வைரல் புகைப்படங்கள்!

 

இந்த புகைப்படங்கள் ட்விட்டரில் தற்போது வைரலாகி வருகிறது. இதுவரை இந்த ட்வீட் 46,000க்கும் மேற்பட்ட லைக்குகள் மற்றும் 15,900க்கும் மேற்பட்ட ரீட்வீட்களை பெற்றுள்ளது.


மலேசியாவில் ஃபுட்பாண்டா டெலிவரி பையன் ஒருவர் தனது சவாரியில் ஒரு பாண்டவை உடன் அழைத்து சென்ற புகைப்படங்கள் தற்போது ட்விட்டரில் வைரலாகி வருகிறது. 


பாண்டாக்கள் மிகவும் அழகாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இதன் கருப்பு, வெள்ளை கலந்த க்யூட் உருவத்தால் இவற்றை செல்லப்பிராணிகளாக வளர்க்க ஏராளமானோர் விரும்புவார்கள். இந்த நிலையில் மலேசியாவில் ஃபுட்பாண்டா உணவு டெலிவரி நிறுவனத்தில் வேலை செய்யும் 22 வயதான உசைர் என்ற நபர் செய்த வித்தியாசமான செயல் அனைவரையும் கவர்ந்துள்ளது. 

அதாவது உசைர், ஃபுட்பாண்டா நிறுவனத்தில் வேலை செய்து வந்த நிலையில் தனது வேலையை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார். இதனையடுத்து தனது பணியின் இறுதி நாளன்று வேலைக்கு செல்லும் போது அவருடன் ஒரு பாண்டைவையும் அழைத்து சென்றுள்ளார். இந்த புகைப்படங்களை ட்விட்டரில் ஷேர் செய்திருந்த உசைர், " கடைசி நாள் நான் பணியில் இருந்து வெளியேறுவதற்கு முன்பு இந்த சோம்பேறி சிறுவனை அழைத்து வர விரும்பினேன், அதனால் உணவு டெலிவரி செய்ய இவனையும் அழைத்து சென்றேன்" என்று குறிப்பிட்டிருந்தார். 


சரி, உண்மையான பாண்டாவை எப்படி உடன் அழைத்து செல்ல முடியும் என நீங்கள் யோசிக்கிறீர்களா? அது உண்மையான பாண்டா தான் என பலரும் எண்ணிய நிலையில், உசைர் தனது எடிட்டிங் திறமையை பயன்படுத்தி, தனது கடைசி நாளில் 'பாண்டா' அவருடன் இருப்பது போன்ற புகைப்படங்களை எடிட் செய்து ஷேர் செய்துள்ளார். இதுகுறித்து பேட்டியளித்த புகைப்படக் கலைஞரான உசைர், "நான் ஒரு புகைப்படக்காரர், அதனால் எடிட்டிங் செய்யும் ஆர்வத்தை வளர்த்துக் கொண்டேன், நான் பாண்டாவுடன் இருக்கும் வகையிலான புகைப்படங்களை ஷேர் செய்தற்கு இதுவே காரணம்" என தெரிவித்தார்.  

பாண்டாக்களை நேசிக்கும் உசைர் தனது கடைசி வேலை நாளில் நல்ல நினைவுகளை உருவாக்க விரும்பியதால் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளார். "மேற்படிப்பிற்காக எனது வேலையை ராஜினாமா செய்கிறேன், ஆனால் ஃபுட்பாண்டாவுடன் மறக்கமுடியாத ஒரு நினைவை உருவாக்க விரும்பினேன்" என அவர் கூறியுள்ளார். 

இந்த புகைப்படங்கள் ட்விட்டரில் தற்போது வைரலாகி வருகிறது. இதுவரை இந்த ட்வீட் 46,000க்கும் மேற்பட்ட லைக்குகள் மற்றும் 15,900க்கும் மேற்பட்ட ரீட்வீட்களை பெற்றுள்ளது. மேலும் ஏராளமானோர் இது உண்மையான பாண்டா போல இருப்பதாக கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். ஒரு யூசர், பாண்டா உணவு டெலிவரி செய்கிறது என குறிப்பிட்டுள்ளார். இன்னொருவர், என்ன ஒரு அழகான எடிட்டிங் என கமெண்ட் செய்துள்ளார்.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்