நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

செவ்வாயில் போக்குவரத்து நெரிசல்!

நிகழாண்டு பிப்ரவரி மாதம் போக்குவரத்து நெரிசல் நிறைந்த மாதமாக இருக்கும். எந்த நாட்டில், எந்த நகரத்தில் என்றுதானே கேட்கிறீர்களா? அதற்கு விடை செவ்வாய் கிரகத்தில் என்றால், ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ), சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகள் செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பிய விண்கலங்கள் இந்த மாதத்தில் அடுத்தடுத்து செவ்வாய் கிரகத்துக்குச் சென்றடைகின்றன. அப்படியென்றால் நெரிசல் இருக்காதா என்ன?

இதில் முதல் திட்டமாக ஐக்கிய அரபு அமீரகம் அனுப்பிய "ஹோப்' விண்கலம் செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப் பாதையை அடைந்து தனது ஆய்ளப் பணியைத் தொடங்கியிருப்பதன் மூலம் புதிய வரலாறு படைத்துள்ளது அந்நாடு. கடந்த ஜூலை மாதம் அனுப்பப்பட்ட அந்த விண்கலம் 300 மில்லியன் மைல்கள் பயணம் செய்து செவ்வாயின் சுற்றுவட்டப் பாதையை அடைந்திருக்கிறது.

அமெரிக்கா, ரஷியா, ஐரோப்பிய யூனியன், இந்தியாளக்கு அடுத்தபடியாக செவ்வாய் கிரக திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்திய நாடு, விண்வெளி திட்டத்தில் கால் பதித்த முதல் அரபு நாடு என நிறைய பெருமைகளை அந்நாடு சொந்தமாக்கிக் கொண்டுள்ளது. ஏற்கெனவே மூன்று விண்வெளித் திட்டங்களை யுஏஇ வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளது. அவை மூன்றும் பூமியைக் கண்காணிக்கும் செயற்கைக்கோள் திட்டங்களாகும். வெளி கிரகமான செவ்வாய்க்கு விண்கலத்தை அனுப்பிய முதல் திட்டத்திலேயே அந்நாடு வெற்றியடைந்துள்ளது.

 ஹோப் விண்கலமானது செவ்வாயின் வளிமண்டலத்தை முழுமையாக ஆய்ள செய்து தரளகளை அனுப்பி வைக்கும் பணியில் ஈடுபடும். இந்த விண்கலத்தில் சக்திவாய்ந்த கேமரா, ஸ்பெக்ட்ரோ மீட்டர் உள்ளிட்ட உபகரணங்கள் உள்ளன. இந்த விண்கலத்தின் ஆய்ள மூலம் செவ்வாயின் வளிமண்டலம் ஏன் சிதைந்து வருகிறது என்பதை அறிந்துகொள்ள இயலும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

யுஏஇ, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகள் செவ்வாய்க்கு கடந்த ஆண்டு ஜூலையில் விண்கலத்தை அனுப்பின. ஏன் அந்தக் குறிப்பிட்ட மாதத்தை தேர்ந்தெடுத்தன என்பதற்குக் காரணம் இருக்கிறது.

இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை பூமியும் செவ்வாயும் நெருக்கமாக வரும். அதை கணக்கிட்டுதான் ஜூலை மாதம் தேர்ள செய்யப்பட்டது. இதன்மூலம் பயண தொலைள குறைவதால், குறைவான எரிபொருளைப் பயன்படுத்தினால் போதும்.


பல்வேறு நாடுகளின் விண்வெளி ஆய்ள நிறுவனங்கள் மட்டுமன்றி, அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் போன்ற தனியார் நிறுவனங்களும் செவ்வாய் கிரகத்துக்கு விண்கலங்களை அனுப்புவதில் ஆர்வம் கொண்டுள்ளன. செவ்வாயில் ஒரு காலத்தில் தண்ணீர் இருந்திருக்கலாம்; இதன்மூலம் உயிர்கள் வாழக்கூடிய சாத்தியகூறுகளும் இருந்திருக்கலாம் என்பதால், அதைக் கண்டறிவதுதான் இந்த ஆர்வத்தின் பின்னணியில் உள்ள காரணம். இருப்பினும் மனிதர்கள் இதுவரை செவ்வாயில் காலடி எடுத்து வைக்க முடியவில்லை. செவ்வாயின் வளிமண்டலம் மிகளம் மெல்லியதாக இருப்பதாலும், ஆக்சிஜன் இல்லாமல் பெரும்பாலும் கார்பன் டை ஆக்ûஸடு நிரம்பியிருப்பதாலும் அங்கு விண்வெளி வீரர்கள் உயிர் வாழ்வது கடினம். எனவே, அக்கிரகத்துக்கு மனிதர்களை அனுப்ப விரிவான ஆய்வகங்கள் தேவைப்படுகின்றன.


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்