நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

புதிய விதிமுறைகள் மூலமாக ஓடிடி தளங்கள் கண்காணிக்கப்படும்: மத்திய அரசு தகவல்

 நெட்ஃபிளிக்ஸ் மற்றும் அமேசான் பிரைம் போன்ற ஓடிடி தளங்களில் புதிய விதிமுறைகள் மூலமாகஉள்ளடக்கம் குறித்து உறுதியான சோதனை செய்யப்படும் என்ற அறிக்கையை தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.

உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சாஷாங்க் சேகர் ஜா தாக்கல் செய்த இது தொடர்பான பொதுநல மனுவில்அரசு இத்தகைய பதிலை அளித்தது. ஓடிடி தளங்களில் ஒளிபரப்பு செய்யப்படும் நிகழ்ச்சிகளின் உள்ளடக்கத்தை சரிபார்க்க ஒரு முறையை வைக்க வேண்டிய அவசியம் குறித்து அரசுக்கு பல புகார்கள்சிவில் சமூக உறுப்பினர்கள்எம்.பி.க்கள்முதல்வர்கள் ஆகியோரிடமிருந்து வந்துள்ளன என்றும்அதனால்தான் சமூக ஊடக தளங்கள், ஓடிடி  மற்றும் டிஜிட்டல் மீடியாக்களுக்கான வரைவு தகவல் தொழில்நுட்பம் (இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைகள் குறியீடுவிதிகள் - 2021, சமீபத்தில் அறிவிக்கப்பட்டன என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


தற்போது இணையத்தில் ஒளிபரப்பு செய்யப்படும் தகவல்ஆடியோ-காட்சி உள்ளடக்கம் போன்றவை சட்டத்தின் பிரிவு 67, 67  மற்றும் 67 பி ஆகியவற்றால் நிர்வகிக்கப்படுகிறதுமேலும் ஆபாசமானபாலியல் ரீதியான செயலைக் கொண்ட உள்ளடக்கத்தை வெளியிடுவதையோ அல்லது கடத்துவதையோ இது தடைசெய்கிறது.

சமீபத்தில் மார்ச் 5 ம் தேதி அமேசான் பிரைம் வீடியோவின் இந்தியத் தலைவர் அபர்ணா புரோஹித் மீது தாண்டவ் வெப் சீரிஸ் தொடர்பாக எஃப்..ஆர் பதிவு செய்யப்பட்டது. புதிய விதிகளின்படி, ஓடிடி இயங்குதளங்கள் மற்றும் டிஜிட்டல் செய்தி ஊடக இணையதளங்களுக்கான குறை தீர்க்கும் முறையையையும் அரசாங்கம் உருவாக்கியுள்ளது.



ALSO READ ;  மிஷன் பாணி - வீட்டில் தண்ணீரை எப்படி சேமிக்கலாம்?


Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!