நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

முகக்கவசம் ஒழுங்காக அணியாத பயணிகள் மீது நடவடிக்கை ; விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்

முகக்கவசம் ஒழுங்காக அணியாத பயணிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விமான போக்குவரத்து ஒழுங்கு முறை அமைப்பு தெரிவித்துள்ளது.
விமான பயணிகள்  முகக்கவசம் உரிய முறையில் அணியாவிட்டால், அவர்களை  தொடர்ந்து பயணம் செய்ய அனுமதிக்கக் கூடாது என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து ஒழுங்கு முறை அமைப்பு தெரிவித்துள்ளது.   

நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், டிஜிசிஏவின் இந்த உத்தரவு வெளியாகியுள்ளது.  திரும்ப திரும்ப அறிவுறுத்தியும் முகக்கவசத்தை உரிய முறையில் பயணி அணிய மறுத்தால், விமானத்தில் இருந்து இறக்கிவிட வேண்டும் எனவும்  கொரோனா தடுப்பு விதிகளை மீறினால், ஒழுங்கற்ற முறையில் நடந்து கொண்டதாக கருதி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. 

உள்நாட்டு விமான போக்குவரத்து அதிகரித்து வரும் நிலையில் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை நாட்டில் பல இடங்களில் அதிகாரித்து உள்ள சூழலில், இந்த உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது. விமான நிலையத்திற்குள் நுழைவது முதல் வெளியேறுவது வரை கொரோனா தடுப்பு விதிகளை கடுமையாக பின்பற்ற வேண்டும். இதை மீறுபவர்கள் உடனடியாக பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்