மாறுகிறது Facebook பெயர்! விரைவில் மார்க் ஜுக்கெர்பெர்க் அறிவிக்க உள்ளதாக தகவல்
- Get link
- X
- Other Apps
உலக அளவில் பிரபலமாக பயன்படுத்தப்பட்டு வரும் பேஸ்புக் செயலியின் புதிய பெயர் அக்டோபர் 28 அன்று அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
வரவிருக்கும் வாரத்தில், வாட்ஸ்அப் (WhatsApp) மற்றும் இன்ஸ்டாகிராம் ( Instagram) போன்ற சமூக ஊடக செயலிகளின் தாய் நிறுவனமான பேஸ்புக் ஒரு வாரத்திற்குள் தனது பெயரை மாற்றப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. பேஸ்புக் தலைமை நிர்வாக அதிகாரி, மார்க் ஜுக்கர்பெர்க் (Mark Zuckerberg) நிறுவனத்தின் புதிய பெயரை அறிவிப்பார் எனவும் கூறப்படுகிறது.
அக்டோபர் 28 ஆம் தேதி நடைபெறும் நிறுவனத்தின் வருடாந்திர மாநாட்டில் பேஸ்புக் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் பேஸ்புக்கின் புதிய பெயரை அறிவிக்க உள்ளதாக தங்களுக்கு நேரடி தகவல் கிடைத்துள்ளதாக போர்டல், தி வெர்ஜ் செய்து வெளியிட்டுள்ளது.
வாட்ஸ்அப் (WhatsApp), இன்ஸ்டாகிராம் ( Instagram) மற்றும் ஓக்குலஸ் (Oculus) போன்ற பல நிறுவனங்களின் தாய் நிறுவனமான ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலைவர் மார்க் ஜுக்கர்பெர்க் (Mark Zuckerberg) மெட்டாவர்ஸை உருவாக்குவதில் கவனம் செலுத்தி வரும் நிலையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
எனினும், இந்த செய்தியை பேஸ்புக் உறுபடுத்தவில்லை என்றால், அதை வதந்தி என்றே, தவறான தக்வல் என்றோ மறுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில காலமாக பேஸ்புக் செயலி மற்றும் அதன் பிற செயலிகள் மூலம் தகவல் திருட்டு நடைபெறுவதாகவும், பாதுகாப்பு அம்சங்கள் குறித்த சந்தேகம் எழுப்பட்டு வரும் நிலையில், மக்களிடையே இவற்றிற்கான வரவேற்பு குறைந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
ALSO READ : பூமியில் மைனஸ் 273.15 டிகிரி செல்சியஸ் தட்பநிலையை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment