நடுவானில் கிழிந்த பாராசூட்... மலை உச்சியில் சிக்கிய நபரின் அதிர்ச்சி வீடியோ!
- Get link
- X
- Other Apps
நியூயார்க் ஜூலியஸ் மல்யுத்த வீரர் மற்றும் பாராசூட் வீரரான இவர், கட்டிடம் பாலம் போன்ற உயரத்தில் இருந்து பாராசூட்டில் குதிப்பவர்.
இதனிடையே, 30 பேர் கொண்ட குழுவுடன் சேர்ந்து பாராசூட்டில் இருந்து குதிக்கும் சாகச நிகழ்வை செய்து காட்ட சென்றுள்ளார்.
அனைவரும் பாராசூட்டை விரித்து பறந்து விட, இவர் கடைசி ஆளாக குதித்துள்ளார். அதை வீடியோவாகவும் பதிவு செய்ய ஒரு சில வினாடிகளிலேயே அவரது பாராசூட் கிழிந்துவிட வானில் பறப்பதற்கு பதிலாக மளமளவென மலை உச்சியில் இருந்து கீழே போயுள்ளார்.
சிக்கிய நபர்
பின்னர், ஒரு இடத்தில் தன்னை நிலைப்படுத்திக்கொள்ள போராட வானில் பறப்பதற்கு பதிலாக மளமளவென மலை உச்சியில் இருந்து கீழே போயுள்ளார். தொடர்ந்து, கடைசியாக கீழே குதித்த இவரை கவனிக்க பின்னால் வேறு ஆட்களும் இல்லை.
இதனால், அவரை மீட்பதிலும் சிக்கல் ஏற்பட்டது. எனினும், அவருக்கு காயம் எதுவும் ஏற்படாதது ஆறுதல் அளித்துள்ளது. பின் ஒரு வழியாக போராடி மலை மீது ஏறி மீண்டு வந்துள்ளார்.
அதிபயங்கர சாகச நிகழ்வில் ஈடுபட்டு பார்ப்பவர்களை திகிலின் உச்சத்திற்கு கொண்டு சென்ற இந்த வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட உள்ளார். இந்த வீடியோ தற்போது ட்ரெண்டாகி வருகிறது.
- Get link
- X
- Other Apps

Comments
Post a Comment