நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

அண்டார்டிக்கா: 1915-ல் தொலைந்த கப்பல்; 107ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடித்த ஆய்வாளர்கள்.......

 1915-ல் மூழ்கிய கப்பல் ஒன்று 107 ஆண்டுகளுக்குப்பிறகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


1915-ம் ஆண்டு நவம்பர் மாதம் அண்டார்டிக்காவைக் கடக்க முதன்முதலில் முயன்ற ஆய்வாளர் ஷேக்லெட்டன் என்பவரின் முயற்சி தோல்வியுற்றது. ​​அப்போது மூன்று மாஸ்டட் பாய்மரக் கப்பல்களில் தொலைந்து போயின.


அவற்றில் ஒரு கப்பலின் கேப்டன் ஃபிராங்க் வோர்ஸ்லி தனது கப்பலைக் கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டார். ஆனால், அவரின் முயற்சி வீணானது. இருப்பினும், அந்தக் கப்பலை கண்டறியும் பணி தொடர்ந்து கொண்டிருந்தது. இந்த நிலையில், ஃபிராங்க் வோர்ஸ்லி செலுத்திய கப்பல் தற்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.


இந்தக் கப்பலை கண்டடைந்த ஆய்வு இயக்குநர் மென்சன் பவுண்ட் இது குறித்து கூறுகையில்,``எங்களின் ஆய்வுப் பயணம் பிரிட்டிஷ் துருவ ஆய்வாளர் ஜான் ஷியர்ஸ் தலைமையில், பனிப்பாறைகளை உடைக்கும் கப்பலான அகுல்ஹாஸ் II- உதவியுடன் மேற்கொள்ளப்பட்டது. அப்போதுதான் வோர்ஸ்லி பதிவு செய்திருந்த பகுதியிலிருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் `எண்டூரன்ஸ்' கப்பல் கண்டுபிடிக்கப்பட்டது. இதுவரை நான் பார்த்ததில் விபத்துக்குள்ளான மரக்கப்பல்களில் மிகச்சிறந்த மரக்கப்பல் இதுதான். இன்றும் அது பெருமளவில் சிதிலமடையாமல் அப்படியே உள்ளது.

இந்தக் கப்பல் பனியில் மோதி விபத்துக்குள்ளான போது, இதில் சிக்கித் தவித்த 28 பேர் கொண்ட குழுவினர் உயிருடன் வீட்டிற்குத் திரும்பியுள்ளனர். அவர்கள் கடல் பனியைக் கடந்து பெங்குவின்களுக்கு மத்தியில் வாழ்ந்து உயிர் பிழைத்துள்ளனர்.

மேலும், இங்கிருந்து உயிர் தப்பிக்க ‘மேட் இன் சைனா’ எனும் மூன்று உயிர்காக்கும் படகுகளில் பயணம் செய்து மக்கள் வசிக்காத எலிஃபண்ட் தீவை அடைந்துள்ளனர். பிறகு அங்கிருந்து, ஷேக்லெட்டன் மற்றும் சில குழுவினர் ஜேம்ஸ் கேர்ட் என்ற லைஃப் படகில் சுமார் 1,300 கிலோமீட்டர்கள் பயணம் செய்து தெற்கு ஜார்ஜியாவுக்குச் சென்றுள்ளனர், ஆகஸ்ட் 1916-ல் எலிஃபண்ட் தீவில் இருந்து மீதமுள்ள குழுவினர் இல்லம் திரும்பியுள்ளனர்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

107 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டறியப்பட்டிருக்கும் இந்த பழையமான கப்பலின் வீடியோ இணையத்தில் வைரலாகப் பகிரப்பட்டு வருகிறது.



ALSO READ : `இதுக்கு பேரு உருளைக் கிழங்கா?' - கின்னஸ் விண்ணப்பத்திலிருந்து நீக்கப்பட்ட கிழங்கு.......

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்