நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

ஈபிள் கோபுரம் 20 அடி உயர்ந்தது.. எப்படி தெரியுமா?

 பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கடந்த 1889ம் ஆண்டு கஸ்டவ் ஈபிள் என்பவரால் ஈபிள் கோபுரம் கட்டப்பட்டு உலக அளவில் புகழ்பெற்றது.



சுற்றுலா பயணிகளை அதிகளவில் கவரும் தலமாகவும் இது விளங்குகிறது. 1929-ம் ஆண்டு அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கிறைஸ்லர் கட்டிடம் கட்டி முடிக்கும் வரை ஈபிள் கோபுரம் தான் உலகின் மிக உயரமான கட்டிடமாக இருந்து வந்தது.

இதனிடையில், இந்த கோபுரம் 986 அடி உயரத்துக்கு கட்டப்பட்ட நிலையில், வானொலி ஒலிபரப்புக்காக கோபுரத்தின் உச்சியில் ஏராளமான ஆண்டெனாக்கள் பொருத்தப்பட்டதை தொடர்ந்து அதன் உயரம் 1,063 அடியாக உயர்ந்தது.

இந்த நிலையில் 20 அடி உயரம் கொண்ட டிஜிட்டல் வானொலி ஆண்டெனா ஈபிள் கோபுரத்தில் புதிதாக பொருத்தப்பட்டுள்ளது.

மேலும், ஹெலிகாப்டர் மூலம் ஈபிள் கோபுரத்தின் உச்சியில் இறக்கப்பட்ட இந்த புதிய ஆண்டெனாவை பணியாளர்களால் பத்தே நிமிடத்தில் பொருத்தப்பட்டது.

இதன் மூலம் ஈபிள் கோபுரத்தின் உயரம் மேலும் 20 அடி உயர்ந்து 1,083 அடியாக உள்ளது.  



ALSO READ : என்னது வெள்ளை நிற மாங்காயா? தீயாக பரவும் புகைப்படம்...

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்