நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

என்னது வெள்ளை நிற மாங்காயா? தீயாக பரவும் புகைப்படம்...

 ஆந்திராவில் மாங்காய் வடிவில் ஒரு முட்டை விற்பனைக்கு வந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டம் பிட்டாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சக்தி பாபு இவர் ஒரு சிறிய பலசரக்கு கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவர் தன் கடைக்கு முட்டை வாங்க அருகில் உள்ள கோழி பண்ணைக்கு சென்று மொத்தமாக முட்டைகளை விலைக்கு வாங்கி வந்துள்ளார். கடைக்கு வந்ததும் அவர் வாங்கி வந்த முட்டைகளை பார்த்த போது ஒரு முட்டை மட்டும் வித்தியாசமாக பெருசாக இருந்துள்ளது இதை கண்டதும் அவர் ஆச்சரியமடைந்துள்ளார்.

அந்த முட்டை பார்ப்பதற்கு நிறை நிற மாங்காய் போலவே இருந்துள்ளது. இதனால் ஆச்சரியமடைந்த அவர் தன் கடையில் இருந்த ஒரு மாங்காவையும் அந்த முட்டையையும் புகைப்படம் எடுத்து சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த செய்தி சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவ பலர் இதை பார்த்து வெள்ளை நிற மாங்காயா என குழம்பினர் ஆனால் இது முட்டை என தெரிந்ததும் ஆச்சியமடைந்தனர். இந்த செய்தி சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.




Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்