நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

செவ்வாய் கிரகத்தில் நாம் பேச கூடிய ஒலியின் வேகம் என்ன...? விஞ்ஞானிகளின் ஆய்வில் தகவல்

 செவ்வாய் கிரகத்தில் நாம் பேச கூடிய ஒலியின் வேகம் பற்றிய தகவலை பெர்சவரன்ஸ் ரோவர் விஞ்ஞானிகளுக்கு தெரிவித்து உள்ளது.

நாசா விஞ்ஞானிகள் செவ்வாய் கிரகத்துக்கு கடந்த 2020ம் ஆண்டு ஜூலை 30ந்தேதி விண்கலம் ஒன்றை அனுப்பினர்.  இந்த விண்கலம் செவ்வாயின் மேற்பரப்பில் உள்ள மண், கல் மற்றும் பாறைகளை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்டது.

நாசா அனுப்பிய இந்த விண்கலம் 7 மாத பயணங்களுக்கு பின்னர் வெற்றிகரமாக செவ்வாய்கிரகத்தை அடைந்த நிலையில், விண்கலத்தில் இருந்து பெர்சவரன்ஸ் ரோவர், கடந்த வருடம் இதே நாளன்று ஜெசிரோ பள்ளத்தில் தரையிறங்கியது.

இந்த ரோவரானது செவ்வாய் கிரகத்தில் பல தகவல்களையும், அரிய புகைப்படங்களையும் சேகரித்து பூமிக்கு அனுப்பி வருகிறது.  இதில், சிவப்பு கிரகம் எனப்படும் செவ்வாய் கிரகத்தில் ஒலியின் வேகம் பற்றிய விவரங்களை விஞ்ஞானிகளுக்கு இந்த பெர்சவரன்ஸ் ரோவர் தெரிவித்து உள்ளது.  செவ்வாயில் ஒலியின் வேகம் பற்றி சர்வதேச ஆய்வாளர்கள் கொண்ட குழுவானது ஆய்வில் ஈடுபட்டது.

அதில், செவ்வாய் பற்றி பயனுள்ள தகவல் எதுவும் கிடைக்க வாய்ப்பு உண்டா? என அவர்கள் அறிய முற்பட்டனர்.  இந்த ரோவரில் இருந்து ஒலி அலைகள் வெளியேறி சென்று, பின்பு ரோவரின் மைக்ரோபோனுக்கு திரும்பி வரும் கால அளவு ஆய்வாளர்களால் கணக்கிடப்பட்டது.

இந்த ஆய்வில், செவ்வாயில் ஒலியானது ஒரு வினாடிக்கு 240 மீட்டர் தொலைவுக்கு பயணம் செய்வது தெரிய வந்தது.  ஆனால், நாம் வாழ கூடிய பூமியில், காற்றின் வழியே பயணம் செய்யும் ஒலியானது ஒரு வினாடிக்கு 343 மீட்டர் அல்லது 2.9 வினாடிகளுக்கு ஒரு கிலோ மீட்டர் வரை செல்கிறது.  இதனால், செவ்வாயில் ஒலியின் வேகம் குறைவது தெரிய வந்துள்ளது.

இதேபோன்று, வெவ்வேறு அதிர்வெண்களை கொண்ட ஒலியானது வெவ்வேறு வேகங்களில் பயணிக்கிறது.  400 ஹெர்ட்சுக்கு மேல் செல்லும்போது, ஒலியின் வேகம் 10 மீட்டர் அதிகரிக்கிறது ஆகியவையும் தெரிய வந்துள்ளது.

எடுத்துக்காட்டாக, 2 பேர் செவ்வாயில் பேசி கொள்கிறார்கள் என்றால், ஏற்ற இறக்கங்களுடன் கூடிய அவர்களது பேச்சு வேறு வேறு நேரங்களில் அவர்களை சென்றடையும்.  இதனால், செவ்வாய் கிரகத்தில் மனிதர்களின் பேச்சு அவர்களுக்கு குழப்பம் தரும் வகையில் சென்று சேரும் என தெரிய வருகிறது.

செவ்வாயில் வெப்பநிலைக்கு ஏற்ப விரைவான மாற்றங்கள் ஏற்படுகிறது என்றும் ஆய்வாளர்கள் கண்டறிந்து உள்ளனர்.  இதற்காக ஒவ்வொரு முறையும் ரோவரில் இருந்து ஒலி அலைகளை வெளியேற செய்து அதன் வேகம் அளவிடப்பட்டு உள்ளது.  செவ்வாயில் வேறு என்ன மறைவான விசயங்கள் உள்ளன என ஆய்வு செய்யும் பணியில் ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.




Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்