நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

வாசிப்பு பழக்கம் மன நலனை காக்கும்.......

 சமூக ஊடகங்கள், ஓ.டி.டி. தளங்கள் போன்றவை புத்தக வாசிப்பு பழக்கத்திற்கு அச்சுறுத்தலாக அமைந்திருக்கின்றன என்பது புத்தக பிரியர்களின் கவலையாக இருக்கிறது. விரும்பிய புத்தகங்கள், பிடித்தமான விஷயங்களை மின்னணு வடிவில் படித்துவிடலாம் என்ற எண்ணம் பலரிடம் எழுந்திருப்பதும் அதற்கு காரணமாக அமைந்திருக்கிறது.


முன்னொரு காலத்தில் இரவு தூங்க செல்வதற்கு முன்பு புத்தகம் வாசிக்கும் வழக்கத்தை பலரும் பின்பற்றினார்கள். அந்த நேரத்தை இப்போது ஸ்மார்ட்போன்கள் அபகரித்துவிட்டன. கூடவே மன அழுத்தத்தையும் சுமக்க வைத்துவிட்டன. கடந்த சில ஆண்டுகளாக மன நோய்களுக்கு ஆளாகு பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது.

அதனை கட்டுப்படுத்துவதில் புத்தகங்களுக்கு முக்கிய பங்கு இருக்கிறது. புத்தகங்களைப் படிப்பதன் மூலம் மன நலனை பாதுகாக்க முடியும் என்று ஆய்வுகள் பலவும் தெரிவிக்கின்றன. வாசிப்பு பழக்கம் எந்தெந்த வகையில் மன நலனுக்கு நன்மை சேர்க்கும் என்று பார்ப்போம்.

1. மன அழுத்தம்

நீங்கள் அடிக்கடி மன அழுத்தத்திற்கு ஆளானால், அதனை கட்டுப்படுத்த புத்தகங்கள் படிக்க முயற்சி செய்யலாம். யோகா, நகைச்சுவை, வாசிப்பு இவை மூன்றும் மன அழுத்தத்தை குறைக்கும் திறன் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் அரை மணி நேரம் புத்தகம் படித்தால் ரத்த அழுத்தம், இதய துடிப்பு, மன உளைச்சல் குறைவது கண்டறியப்பட்டது, யோகா, நகைச்சுவை போன்றவையும் அதே பலன்களை தருவதும் உறுதி செய்யப்பட்டது.

2. மனச்சோர்வு:

புத்தக வாசிப்பு பழக்கம் மன அழுத்தத்தை மட்டுமின்றி மனச்சோர்வையும் சமாளிக்க உதவும். ஒரு நபர் மனச்சோர் வடைந்தால், தனிமைப்படுத்தப்பட்டதாக உணரலாம். அத்தகைய சமயத்தில் புத்தகம் வாசிப்பது கற்பனை உலகத்திற்குள் அழைத்து செல்லும். அதில் குறிப்பிடப்பட்ட விஷயம் குறித்து மனம் ஆராய தொடங்கும். புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் புனைக் கதைகள் அல்லாதவை கூட சுவாரசியங்களை ஏற்படுத்தி மனச்சோர்வை விரட்டியடிக்க உதவும். வாழ்க்கை தரத்தை மேம் படுத்தவும், புதிய யுக்திகளை கையாளவும் வழிவகை செய்யும்.

3. உறவுகள்

ஒரு புத்தகத்தைப் படிக்கும்போது, அதில் இடம்பெற்றிருக்கும் கதாபாத்திரங்களின் உணர்வுகள், நெருக்கடியான சூழ்நிலைகள், போராட்ட வாழ்க்கை போன்ற விஷயங்களை மனம் அசைபோடும். புனைகதைகளைப் படிப்பவர்கள் மற்றவர்களுடன் எளிதாக தொடர்பை வளர்த்துக்கொள்ள முடியும், பச்சாதாபம் கொள்ள முடியும் என்று ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. மற்றவரின் சூழ்நிலைகளை அவர்களால் நன்கு புரிந்து கொள்ள முடியும் என்பதால் உறவுகளுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளவும், உறவை வளர்க்கவும் உதவும். துன்பத்திற்கு ஆளாகும்போது உறவுகளும், சமூகமும் உதவும். அதனால் மன ஆரோக்கியம் மேம்படும்.

4. தனிமையை போக்கும்

வயதானவர்கள் புத்தகம் படிக்கும் வழக்கத்தை பின்பற்றினால் அது பலவிதங்களில் நன்மை பயக்கும். குறிப்பாக தனிமை உணர்வை விரட்டியடிக்க புத்தகம் உற்ற நண்பனாக விளங்கும். வயதாகும்போது மனதை இலகுவாக்கிக்கொள்ள புத்தகங்கள் படிப்பது நல்லது என்று அமெரிக்கன் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஏஜிங் அமைப்பு நடத்திய ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

5. தூக்கம்:

குழந்தை பருவத்தில், பலரும் தூங்க செல்வதற்கு முன்பு தாத்தா, பாட்டியிடம் கதைகள் கேட்டிருப்பார்கள். அந்த பழக்கத்தை தங்கள் குழந்தைகளும் பின்பற்றுவதற்கு வழிகாட்டவேண்டும். கதை புத்தகங்கள் வாங்கி கொடுத்து வாசிப்பு பழக்கத்தை ஊக்கப்படுத்தலாம். மின்னணு புத்தகங்களுக்கு பதிலாக காகித புத்தகங்களை தேர்ந்தெடுப்பதுதான் நல்லது. ஏனெனில் மின்னணு சாதனங்கள் தூக்கத்தை சிதைக்கும் நீல நிற ஒளியை வெளியிடும். அதனால் தூங்குவதில் சிக்கல் நேரும்.

புத்தகம் படிக்கும் பழக்கத்தை வளர்த்துக்கொள்வது அறிவுக்கு மட்டுமல்ல, மன ஆரோக்கியத்திற்கும் பயனுள்ளதாக இருக்கும். எனவே, ஒவ்வொரு நாளும் சில நிமிடங்களையாவது புத்தகம் படிப்பதற்கு ஒதுக்க வேண்டும்.




Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!