நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

உயர்ந்த விருதுகள்......

 நோபல் பரிசு, உலகின் மிக உயர்ந்த பரிசாக கருதப்படுகிறது. இது டைனமைட்டை கண்டுபிடித்த ஆல்பெரெட் நோபலால் நிறுவப்பட்டது.


ஆல்பெரெட் நோபலால் மரணத்திற்கு பிறகு(1896) அவரது உயிலை வாசிக்கும்போது தான் இவர் இத்தகைய ஒரு பரிசை நிறுவியுள்ளார் எனத் தெரிய வந்தது. ஒவ்வொரு ஆண்டும் அமைதி, இலக்கியம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம் மற்றும் மருத்துவ துறைகளில் தலை சிறந்தவர்களுக்கு இப்பரிசு வழங்கப்படுகிறது. நோபல் பரிசு ஒரு பதக்கம், சான்றிதழ் மற்றும் ரொக்கப்பரிசு அடங்கியது. பரிசுத் தொகை சுமார் 8.5 கோடி ரூபாய்(2021). நோபல் பதக்கத்தை வடிவமைத்தவர் சுவீடன் சிற்பி எரிக் லிண்ட் பெர்க்.


மக்சாசே விருது

இதேபோல, பிலிப்பைன்ஸ் நாட்டின் அதிபராக இருந்த ரமோன் மக்சாசேயின் நினைவாக 1957-ல் உருவாக்கப்பட்ட இந்த விருது, 6 துறைகளில் மிகச் சிறப்பாக செயல் புரிந்தவர்களுக்கு வழங்கப்படுகிறது. ஆசியாவின் நோபல் பரிசு என கருதப்படும் மக்சாசே விருது 1958-ம் ஆண்டிலிருந்து வழங்கப்பட்டு வருகிறது. அரசுப்பணி, சமூக சேவை, சமூகத் தலைமை, சர்வதேச புரிதல், பத்திரிகை பணி என்னும் 5 துறைகளுடன், புதுத் தலைமை என்னும் புதிய துறையும் 2001-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில், ரமோன் மக்சாசேயின் பிறந்த தினமான ஆகஸ்ட் மாதம் 31-ந் தேதி அன்று இவ்விருது வழங்கப்படுகிறது. புதுத்தலைமைக்கான விருதை, விருது பெற்றவரும், அவர் சார்ந்த நிறுவனமும் சரிசமமாக பங்கிடுகின்றனர். ஏதாவதொரு துறையில் ஒன்றுக்கும் மேற்பட்ட விருதாளர்கள் அறிவிக்கப்பட்டால், பரிசுத் தொகை சரிசமமாக பகிர்ந்து அளிக்கப்படுகிறது. ஆசியாவை சேர்ந்தவர்களே இந்த விருதுக்கு தகுதி உடையவர்கள். மக்சாசே விருது, நோபல் பரிசு, பாரத் ரத்னா ஆகிய விருதுகளை பெற்ற ஒரே நபர் அன்னை தெரசா மட்டுமே.




Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!