மனிதர்களின் ரத்தத்தில் பிளாஸ்டிக்! ஆராய்ச்சியாளர்கள் கொடுத்த அதிர்ச்சி
- Get link
- X
- Other Apps
மனித ரத்தத்தில் மைக்ரோ பிளாஸ்டிக்குகள் இருப்பது சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
பிளாஸ்டிக்கின் ஆதிக்கம்
உலகம் முழுவதும் பிளாஸ்டிக் பயன்பாடுகள் நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ளன. எளிதில் மக்காத பொருளாக இருப்பதால் சூழலியலுக்கு அச்சுறுத்தலாக பிளாஸ்டிக் உள்ளது. நிலம், கடல் பரப்புகளில் பிளாஸ்டிக் எங்கும் விரவிக் காணப்படுகிறது. 5 மில்லி மீட்டருக்கும் குறைவான விட்டம் உடைய பிளாஸ்டிக்குகள் பொதுவாக மைக்ரோ பிளாஸ்டிக்குகள் என வகைப்படுத்தப்படுகின்றன.
ஆய்வில் வெளியான அதிர்ச்சி
இந்நிலையில் நெதர்லாந்து விஞ்ஞானிகளின் ஆய்வில் மனித ரத்தத்தில் மைக்ரோ பிளாஸ்டிக்குகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெதர்லாந்தின் பேராசிரியர் டிக் வெத்தாக் மேற்கொண்ட ஆய்வில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
மைக்ரோ பிளாஸ்டிக்குகள் குறித்த விஞ்ஞானிகளின் ஆய்வில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட மொத்த எண்ணிக்கையில் 80 சதவிகிதம் பேரின் ரத்தத்தில் மைக்ரோ பிளாஸ்டிக்குகள் இருப்பது தெரியவந்துள்ளது.
ரத்தத்தில் மைக்ரோ பிளாஸ்டிக்
இந்த மைக்ரோ பிளாஸ்டிக்குகள் மனித உடலில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து ஆய்வுகள் நடைபெற்று வரும் நிலையில் இவை ஆய்வகங்களில் சோதனைக்குள்ளாக்கப்படும் மனித உயிரணுக்களில் சேதங்களை உண்டு பண்ணுவதாக விஞ்ஞானிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் குழந்தைகள் மற்றும் பெரியவர்களின் மலத்தில் மைக்ரோபிளாஸ்டிக் இருப்பது கண்டறியப்பட்டது.
ALSO READ : குளிர்ச்சியான இடங்களைத் தேடும் பாம்புகள்! ஆபத்தை அறிந்து கொள்ளுங்கள் மக்களே
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment