வறண்ட சருமத்தைக் குளிர்ச்சியாக்கும் மாய்ஸ்சுரைசர்....
- Get link
- X
- Other Apps
ரசாயனங்கள் சேர்க்காமல் இயற்கையான பொருட்களைக் கொண்டு எண்ணெய் சருமம், வறண்ட சருமம் என அனைத்து சருமத்திற்கும் ஏற்ற வகையில், பக்க விளைவு ஏற்படுத்தாத ‘மாய்ஸ்சுரைசர்’ தயாரிப்பதைப் பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
கிரீன் டீ - 3 தேக்கரண்டி
பாதாம் எண்ணெய் - 1 தேக்கரண்டி
கற்றாழை ஜெல் - 3 தேக்கரண்டி
தேன் மெழுகு - 2 தேக்கரண்டி
கிரீன் டீ எசென்ஷியல் எண்ணெய் - 1 தேக்கரண்டி
செய்முறை:
ஒரு சிறிய பாத்திரத்தில் பாதாம் எண்ணெய், தேன் மெழுகு இரண்டையும் கலந்து, கொதிக்கும் நீரின் மேல் வைக்கவும். தேன் மெழுகு உருகியதும் சிறிது குளிரவைத்து, கிரீன் டீ, கற்றாழை ஜெல், கிரீன் டீ எசென்ஷியல் எண்ணெய் ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து கிரீம் பதம் வரும்வரை கலந்து குளிர்சாதனப் பெட்டியில் குளிர வைக்கவும்.
இதனை தினமும் அல்லது வாரத்தில் 5 நாட்கள் போட்டு வந்தால் நல்ல மாற்றம் தெரிவதை காணலாம்.
கிரீன் டீ, கற்றாழை ஆகியவை வெயிலால் வறண்ட சருமத்தைக் குளிர்ச்சியாக்கும் தன்மை கொண்டவை. தேன் மெழுகு சருமத்தை மென்மையாக மாற்றும். பாதாம் எண்ணெய் சருமத்தைப் பொலிவாக்கும்.
also read : ஆயுர்வேத எண்ணெய்களின் அற்புத நன்மைகளையும், அதன் வரலாற்றையும் தெரிந்துகொள்ளுங்கள்..!
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment