நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

ஆயுர்வேத எண்ணெய்களின் அற்புத நன்மைகளையும், அதன் வரலாற்றையும் தெரிந்துகொள்ளுங்கள்..!

ஆயுர்வேதத்தின் அறிவியல் இயற்கைக்கும், மனிதனுக்கு இடையே ஒரு பிணைப்பை உருவாக்கி, இரண்டையும் ஒன்றோடு ஒன்று கலக்க உதவுகிறது. 
ஆயுர்வேதம் எப்போதுமே வெளிப்புறத்தில், மேலோட்டமாக குணப்படுத்தாமல், உள்ளே ஊடுருவிச் சென்று நம்மை சீரமைப்பதை தான் கொள்கையாக கொண்டுள்ளது. ஆயுர்வேதத்தின் அறிவியல் இயற்கைக்கும், மனிதனுக்கு இடையே ஒரு பிணைப்பை உருவாக்கி, இரண்டையும் ஒன்றோடு ஒன்று கலக்க உதவுகிறது.

ஆயுர்வேதத்தை பொறுத்தவரை ஒருவர் உடலால் மட்டுமின்றி மன ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் ஆரோக்கியமாக இருப்பதையே முழு ஆரோக்கியம் எனக்கூறுகிறது. ஆயுர்வேத சூத்திரங்களின் படி, உடலில் இருக்க வேண்டிய வாதம், கபம், பித்தத்தின் அளவு சமநிலையில் இருக்க வேண்டும். இதற்கு ஆயுர்வேத எண்ணெய்கள் உதவுகின்றன.

ஆயுர்வேத எண்ணெய்களின் பயன்பாடு 10,000 ஆண்டுகளுக்கு முன்பே உருவானது. ஆயுர்வேதத்தின் முதன்மை குறிப்பான சரக சம்ஹிதாவில் அவை பயன்படுத்தப்பட்டதாக குறிப்பு உள்ளது. தேங்காய் எண்ணெய், பாதாம் எண்ணெய் மற்றும் ஆமணக்கு எண்ணெய் போன்ற கேரியர் எண்ணெயில் மஞ்சள், துளசி, பிராமி மற்றும் ரோஸ்மேரி போன்ற முழுமையான குணப்படுத்தும் மூலிகைகளைச் சேர்ப்பதன் மூலம் ஆயுர்வேத எண்ணெய்கள் தயாரிக்கப்படுகின்றன.
ஆயுர்வேத எண்ணெய்களைப் பயன்படுத்துவதற்கான சிறந்த வழி, அவற்றை உங்கள் உடல் மீது மசாஜ் செய்வதாகும். உடலையும் மனதையும் குணப்படுத்தவும், சுய-அன்பைப் பயிற்சி செய்யவும் சுய மசாஜ் செய்யும் ஆயுர்வேத முறையான அபியங்கா நுட்பத்தைப் பயன்படுத்தலாம். இது ஆழமான திசு ஊடுருவலை அனுமதிக்கிறது மற்றும் உடலை மருத்துவ மூலிகைகள் மூலம் குணப்படுத்த உதவுகிறது.

ஆயுர்வேத செயல்முறைகளில் அடித்தளமாக விளங்கும் இயற்கையான மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் ஆயுர்வேத எண்ணெய்கள் பற்றியும் அவற்றின் பலன்கள் என்னென்ன என்பதையும் அறிந்து கொள்வோம்.

வாத தோஷம்:

வாத தோஷம் என்பது உடலில் அதிக அளவில் காற்றைக் கொண்டவர்களை குறிக்கிறது. வாத தோஷத்தை சரி செய்ய, எள் எண்ணெய் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இது பிராண ஓட்டம் மற்றும் உடல் வழியாக சிறப்பாக அமைய உதவுகிறது மற்றும் ஓஜஸ் அளவை (நோயெதிர்ப்பு அமைப்புக்கு பின்னால் உள்ள ஆற்றல்) பலப்படுத்துகிறது. நீங்கள் இந்த எண்ணெயை கோதுமை பொடியுடன் பயன்படுத்தலாம்.

பித்த தோஷம்:

பித்த தோஷம் கொண்டவர்களுக்கு நெருப்பு மற்றும் நீர் அல்லது நெருப்பு மற்றும் காற்றின் விகிதம் அதிகமாக இருக்கும். இதனை சரி செய்ய நீங்கள் தேங்காய் எண்ணெய் அல்லது பிராமி எண்ணெய் பயன்படுத்தலாம். தேங்காய் எண்ணெய் உடலை குளிர்ச்சியாக்க பயன்படுவதோடு, உடலில் உள்ள பித்தத்தை சமநிலைப்படுத்தவும் உதவுகிறது. பிராமி எண்ணெய் மனதை அமைதிப்படுத்தவும் சமநிலைப்படுத்தவும் உதவுகிறது.

கப தோஷம்:

கப தோஷம் பூமி மற்றும் நீரின் அதிக விகிதத்தை கொண்டுள்ளது. இதனை சரி செய்ய கடுகு எண்ணெய் அல்லது ஆமணக்கு எண்ணெய் ஏற்றது. ஆயுர்வேதம் கப தோஷத்திற்கு சூடான எண்ணெய்களை பரிந்துரைக்கிறது. கப தோஷம் உள்ளவர்கள் வாத அல்லது பித்த தோஷம் உள்ளவர்களை விட குறைவாக பயிற்சி செய்ய வேண்டும்.

ஆயுர்வேத எண்ணெய்கள் சிறந்த தூக்கம், முடி, தோல் மற்றும் மிக முக்கியமாக அமைதியான மனதை ஊக்குவிக்கிறது. நம் மனம் ஓய்வெடுக்கும் போது, ​​நம் உடல் குணமாகும். இயற்கையாக தயாரிக்கப்பட்ட ஆயுர்வேத எண்ணெய்களைப் பயன்படுத்துவதன் உண்மையான முக்கியத்துவம் இதுதான்.





Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!