புதிதாக கற்றுக்கொள்ளும் மனப்பான்மையை வளர்த்துக்கொள்வது உங்களுக்குள் இருக்கும் திறனை மேம்படுத்த உதவும். பொறுமை, கடின உழைப்பு மற்றும் ஊக்கத்தை அதிகப்படுத்தும்.
நம்மைப் பற்றி பிறருடைய அபிப்பிராயம், நமது தோற்றம், நடந்துகொள்ளும் விதம் மற்றும் சிந்தனைத் திறன் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே தீர்மானிக்கப்படுகிறது. பலரும் வெளித் தோற்றத்தை மேம்படுத்துவதற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை, சிந்தனைத் திறனை மேம்படுத்துவதற்கு கொடுப்பதில்லை. நம்முடைய ஸ்மார்ட் லுக்கை மனதளவில் மேம்படுத்த சில டிப்ஸ்..
பொதுவாக இரண்டு வகையான மூளை செயல்பாடு உடையவர்கள் இருப்பார்கள். ஒன்று எப்போதும் புதிதாக சிந்தித்துக் கொண்டே இருப்பது. மற்றொன்று ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு மேல் சிந்தனையை நிறுத்திவிடுவது. இவற்றில் எந்த வகையைச் சேர்ந்தவராக நீங்கள் இருந்தாலும், சிந்தனையின் பாதையில் சிறு மாற்றங்கள் செய்தாலே உங்கள் ஸ்மார்ட் லுக்கை மேம்படுத்தலாம்.
தோல்வியே முன்னேற்றத்துக்கான அடித்தளம். இது நம் திறமையை மெருகேற்றும் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.
முதலில் உங்கள் மன மற்றும் உடல்நலனில் அக்கறை செலுத்த வேண்டும். நம்மைப் பார்த்துக்கொள்வதற்காக நம் பெற்றோர், நண்பர்கள், உறவினர்கள், பிடித்தவர்கள் இருக்கிறார்கள் என்று நினைக்கக் கூடாது. எப்போதும், எந்த நேரத்திலும் உங்களுடைய தேவையை, நீங்களே பூர்த்தி செய்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.
புதிதாக கற்றுக்கொள்ளும் மனப்பான்மையை வளர்த்துக்கொள்வது உங்களுக்குள் இருக்கும் திறனை மேம்படுத்த உதவும். பொறுமை, கடின உழைப்பு மற்றும் ஊக்கத்தை அதிகப்படுத்தும்.
படிப்பதில் ஆர்வம் உள்ளவர்கள் தினசரி சில நிமிட நேரங்களாவது புத்தகம் படிக்கலாம். பொது அறிவு சார்ந்த நாளிதழ் அல்லது தகவல் பகிர்வுகளை படிக்கலாம். புத்தகம் படிக்க விரும்பாதவர்கள் தினமும் உங்களுக்கு தெரியாத புது நபருடன் பேசுவதற்கு முயற்சிக்கலாம். இது சக மனிதரின் குணாதிசயம், சிந்தனை திறன், பழக்க வழக்கம், செயல்பாடு, வளர்ச்சி, நடைமுறை போன்றவற்றை அறிந்துகொள்வதற்கு உதவும். இதன் மூலம் உங்களை புதிதாக அணுகுபவரின் எண்ண ஓட்டம் மற்றும் காரணத்தை உங்களால் எளிதாக கணிக்க முடியும்.
உங்கள் திறமையை நீங்களே குறைத்து எடை போடாதீர்கள். நேர்மறை எண்ணம் கொண்டவர்கள், உங்களைச் சுற்றி இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். நீங்கள் துவண்டு போகும்போது அவர்களே உங்களுக்கான உந்துதல்.
எனக்கு அனைத்து விஷயங்களிலும் எல்லாம் தெரியும் என்ற எண்ணத்தை கைவிட்டு, எனக்கு தெரியாதவற்றை கற்றுக்கொள்ள எப்போதும் தயார் என்ற மன மாற்றத்தை வளர்த்துக்கொள்ளுங்கள். இது எந்தவொரு முயற்சியையும் எளிதில் விட்டுக்கொடுக்கும் பழக்கத்தை கட்டுப்படுத்தும்.
Comments
Post a Comment