நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

முகத்தில் தேவையில்லாத முடி இருக்கிறதா? பியூட்டி பார்லர் வேண்டாம்! இந்த இரண்டு மாஸ்க் டிரை பண்ணுங்க!

 மஞ்சள், முட்டை, கொண்டைக்கடலை மாவு போன்ற வீட்டில் எளிதாகக் கிடைக்கும் பொருட்கள் உண்மையில் அதிசயங்களைச் செய்யும் என்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.


முகத்தில் முடி இருப்பது உங்கள் பளபளப்பை மங்கச் செய்யலாம், மேக்-அப் பொருட்களை பிளென்ட் செய்வதில் தடைகளை ஏற்படுத்தலாம் அல்லது தோல் பராமரிப்புப் பொருட்களின் வேலையில் தலையிடலாம்.

முக முடியை அகற்ற வாக்ஸிங், த்ரெடிங் மற்றும் லேசர் சிகிச்சைகள் போன்ற செயல்முறைகளை நாடலாம். இருப்பினும், நீங்கள் வலியைத் தவிர்க்க விரும்பினால், அல்லது ஒரு காசு கூட செலவழிக்க விரும்பவில்லை என்றால், வீட்டிலேயே முக முடிகளை அகற்றுவதற்கான இயற்கையான வழிகளுக்குத் திரும்பலாம்!

வீட்டு வைத்தியம் முக முடிகளை அகற்றாது, ஆனால் அவற்றின் வளர்ச்சியைக் குறைக்கும் என்று கூறப்படுகிறது. மஞ்சள், முட்டை, கொண்டைக்கடலை மாவு போன்ற வீட்டில் எளிதாகக் கிடைக்கும் பொருட்கள் உண்மையில் அதிசயங்களைச் செய்யும் என்பதை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்.

பியூட்டி குரு, ஷானாஸ் ஹுசைன் முகத்தில் உள்ள முடிகளை அகற்ற இயற்கையான மற்றும் வீட்டிலேயே தயார் செய்யக்கூடிய முறைகளைப் பகிர்ந்து கொண்டார்.

கொண்டைக்கடலை மாவு மாஸ்க்!


கொண்டைக்கடலை மாவு, வீட்டில் மிக எளிதாகக் கிடைக்கும். ஆனால் சரியான கலவையைத் தயாரிக்க உங்களுக்கு மஞ்சள் தூள், கிரீம் மற்றும் பால் தேவைப்படும். ஒரு கிண்ணத்தை எடுத்து அதில் நான்கு டேபிள் ஸ்பூன் கொண்டைக்கடலை மாவு, ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு டீஸ்பூன் கிரீம் மற்றும் 2-3 டீஸ்பூன் பால் சேர்த்து கலக்கவும்.

பேஸ்ட் தடிமனாக இருக்கும் வரை அனைத்து பொருட்களையும் சரியாக கலக்கவும். பேஸ்ட்டை உங்கள் முகத்தில் தடவி சரியாக உலர விடவும். பேஸ்ட் உங்கள் தோலில் போதுமான அளவு இறுக்கமாகி விட்டதாக உணர்ந்தவுடன், உங்கள் முடி வளர்ச்சியின் எதிர் திசையில் பேஸ்ட்டை இழுக்க வேண்டிய நேரம் இது, பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இது மேல்நோக்கி இருக்கும்.

முதலில் இழுக்கும் போதே உடனடியாக முடி உதிர்ந்து போகாது. 2-3 முறை தொடர்ந்து செய்யும் போது, சில முடிவுகளை காட்டலாம். இந்த கலவையின் வழக்கமான பயன்பாடு, சில அற்புதமான முடிவுகளைக் காண்பிக்கும்.

அரிசி மாவு மற்றும் மஞ்சள் மாஸ்க்!


இரண்டு டீஸ்பூன் அரிசி மாவு, இரண்டு டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் 2-3 டீஸ்பூன் பால் (தேவைக்கு ஏற்ப) கலக்கவும். இந்த பொருட்களின் கலவையானது அரிசி மாவின் கெட்டியான பேஸ்ட் போல் இருக்க வேண்டும். கலவையை மெதுவாக தடவி, அது இறுக்கமாக மாறும் வரை உங்கள் முகத்தில் வைக்கவும். கழுவுவதற்கு முன், முடிந்தவரை மாஸ்கை இழுக்க முயற்சிக்கவும். பிறகு’ உங்கள் முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

இயற்கையான வழிகள் நேரத்தை எடுத்துக்கொள்கின்றன என்பதை நாம் அனைவரும் அறிவோம், ஆனால் அவை பயனுள்ளவை மற்றும் நீண்ட கால முடிவுகளைக் காட்டுகின்றன.

எனவே, இயற்கையான தீர்வைப் பயன்படுத்துவதற்கான உங்கள் முதல் சில முயற்சிகளில் பொறுமையை இழக்காதீர்கள். அதைத் தவறாமல் செய்து, உங்கள் முடி வளர்ச்சிக்கு எதிரான திசையில் இழுக்கவும் அல்லது உரிக்கவும். கழுவிய பிறகு, மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்த மறக்காதீர்கள்.


ALSO READ : பொடுகு தொல்லை பாடாய்படுத்தி எடுக்குதா? இதனை எப்படி எளிய முறையில் போக்கலாம் தெரியுமா?

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!