நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

கண்டுபிடிப்பும், கண்டுபிடிப்பாளர்களும்...!

 அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தப்படும் சில பொருட்களை யார் வடிவமைத்தனர், எந்த நூற்றாண்டில் இருந்து அது மக்கள் பயன்பாட்டில் உள்ளது என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.



 * நீர் மூழ்கி கப்பலை கண்டுபிடித்தவர், கோர்நெலிஸ் டிரெப்பிள். ஆண்டு: 1624

* வெப்பமானியை டேனியர் காப்ரியல் பாரன்ஹீட் என்பவர் வடிவமைத்தார். ஆண்டு: 1714

* சறுக்கி செல்லக்கூடிய ரோலர் ஸ்கேட்ஸ் காலணியை ஜீன் ஜோசப் மெர்லின் என்பவர் வடிவமைத்தார். ஆண்டு: 1760.

* மனிதர்களை சுமந்து கொண்டு வானில் பறக்கக்கூடிய வெப்ப பலூனை, ஜோசப் மைக்கேல் மற்றும் ஜாக்கஸ் எட்டின் ஆகியோர் வடிவமைத்தனர். ஆண்டு: 1783.

* சைக்கிளை வடிவமைத்தவர், பாரன் கார்ல் வான் டிரைஸ். ஆண்டு: 1818

* மின்சார அயன்பாக்ஸை ஹென்றி சீலி என்பவர் வடிவமைத்தார். ஆண்டு: 1882.

* பவுண்டன் பேனாவை வடிவமைத்தவர், லெவிஸ் எட்சன் வாட்டர்மேன். ஆண்டு: 1884.




Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்