கூந்தல் பிரச்சனைகளை தீர்க்க சிறந்த வழி இயற்கை பொருட்களையும் சேர்த்தே நாடுவது. உங்கள் ஷாம்பூவில் தேங்காய் பால் சேர்ப்பது முடிக்கு தேவையான ஆரோக்கிய நன்மைகளை அளிக்கிறது.
அதீத ஹேர் ஸ்டைல்கள், ஹேர் கலரிங் மற்றும் கெமிக்கல் ட்ரீட்மென்ட்ஸ் உள்ளிட்ட பல அடங்கிய வேகமான ஃபேஷன் உலகத்தில், முடி சார்ந்த பிரச்சனைகள் அதிகரித்து வருகிறது. மாசுபாடு, புற ஊதா கதிர்கள் மற்றும் ஹார்ட் வாட்டர் உள்ளிட்ட வெளிப்புற காரணிகளும் முடி பிரச்சனைகளில் பெரும்பங்கு வகிக்கின்றன.
இந்த நிலையில் மார்க்கெட்டில் கிடைக்கும் பல முன்னணி பிராண்டுகளின் அட்வான்ஸ்டு ஷாம்புக்கள் முடி சேதத்தை மாற்றியமைத்து, அடர்த்தியான முடியை உங்களுக்கு வழங்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் எல்லோருக்கும் ஷாம்புக்கள் பலன் அளிக்கிறது என்று சொல்ல முடியாது. கூந்தல் பிரச்சனைகளை தீர்க்க சிறந்த வழி இயற்கை பொருட்களையும் சேர்த்தே நாடுவது. உங்கள் ஷாம்பூவில் தேங்காய் பால் சேர்ப்பது முடிக்கு தேவையான ஆரோக்கிய நன்மைகளை அளிக்கிறது.
உங்கள் தலைமுடி பராமரிப்பு வழக்கத்தில் சிறிது தேங்காய் பாலை பயன்படுத்தினாலே கூந்தல் பிரச்சனைகளை வேரிலிருந்தே குணப்படுத்த முடியும். உங்கள் ஷாம்பூவை ஒரு ஸ்பூன் கெட்டியான தேங்காய்ப்பாலுடன் டைல்யூட் செய்து, உங்கள் வழக்கமான ஹேர் வாஷ் வழக்கத்தை பின்பற்றினால் போதும். ஏனென்றால் தேங்காய் பால் வைட்டமின்கள் C, E, B1, B3, B5 மற்றும் B6 மற்றும் இரும்பு, செலினியம், சோடியம், கால்சியம், மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் உள்ளிட்ட பல முக்கிய மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளது. மயிர்க்கால்களை பலப்படுத்தி, முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
தேங்காய்ப்பாலை ஷாப்ம்பூவுடன் கலக்கும் இந்த முடி ஆரோக்கியத்தை மேம்படுத்தும் இந்த டெக்கினிக்கிற்கு சல்பேட் மற்றும் பாரபென் இல்லாத ஷாம்பூவை பயன்படுத்த நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள். ஷாம்புவில் தேங்காய் பாலை கலந்து பயன்படுத்துவதால் கிடைக்கும் ஆதரவு நன்மைகள்:
மிருதுவான தலைமுடி:
ஷாம்புவில் தேங்காய் பால் கலந்து பயன்படுத்துவது கூந்தலை மிருதுவாகவும் பட்டுப் போலவும் வைத்திருக்க உதவும். உலர்ந்த, சேதமடைந்த மற்றும் உடையக்கூடிய முடி மற்றும் பிளவுபட்ட முடிகளை மீட்டெடுக்க இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
உச்சந்தலையில்..
இது உங்கள் உச்சந்தலையில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது, சேதத்தை எதிர்த்துப் போராடுகிறது மற்றும் முடியை ஆழமாக நிலைநிறுத்துகிறது. வறண்ட, அரிப்பு மற்றும் எரிச்சல் உள்ள உச்சந்தலைக்கு தேங்காய் பால் ஒரு டானிக்காக பயன்படும். முடிந்தால் வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட தேங்காய்ப்பாலை கொண்டு உச்சந்தலையில் அல்லது தலை முழுவதும் மசாஜ் செய்வது நல்ல பலனை தரும்.
பிசுபிசுப்பை கட்டுப்படுத்துகிறது:
உங்கள் தலைமுடியை சம அளவு தேங்காய் பால் மற்றும் ஷாம்பு கொண்டு அலசுவது அல்லது ஒரு ஸ்பூன் தேங்காய் பாலை லீவ்-இன் கண்டிஷனராக பயன்படுத்துவது பிசுபிசுப்பை குறைப்பதோடு நீளமான, அடர்த்தியான முடியை பெற உதவுகிறது.
நரை முடிக்கு..
கூந்தலுக்கு நிறத்தை உருவாக்கும் நிறமியை தொடர்ந்து உருவாக்க செல்களுக்கு வைட்டமின் பி12 தேவைப்படுகிறது. தேங்காய் பாலில் இருக்கும் வைட்டமின் பி12, குறைபாட்டின் காரணமாக ஏற்படும் இளநரையை தடுக்கிறது.
முடி வளர்ச்சி மற்றும் அடர்த்தி:
தேங்காய்ப் பாலில் உள்ள ஊட்டமளிக்கும் குணங்கள் முடியின் அளவை அதிகரித்து, அடர்த்தியான முடியை உங்களுக்கு வழங்குகிறது. வாரத்திற்கு ஒருமுறை தேங்காய்ப் பாலை ஹேர் மாஸ்க்காக பயன்படுத்துமாறு நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
Comments
Post a Comment