நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

பாதங்களில் உள்ள வெடிப்பைப் போக்கி அழகாக்க சில எளிய வழிகள்....

 பாதங்களில் உள்ள குதிகால் வெடிப்பைப் போக்குவதற்கான சில எளிய வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து பின்பற்றி உங்கள் பாதங்களை அழகாக வைத்துக் கொள்ளுங்கள்.


பப்பாளி பழத்தை நன்கு அரைத்து அதை பாதங்களில் வெடிப்பு உள்ள பகுதியில் தேய்க்க வேண்டும்.

மருதாணி இலைகளை நன்றாக அரைத்து பித்த வெடிப்பு உள்ள இடங்களில் தேய்த்து உலர விடவேண்டும். பின்னர் தண்ணீரில் கழுவி வர நாளடைவில் பித்த வெடிப்பு குணமாகும்.

நன்கு கனிந்த வாழைப்பழத்தை மசித்து, பாதங்களில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி அடிக்கடி அல்லது தினமும் செய்து வந்தால், பாதங்களில் ஈரப்பசை தக்க வைக்கப்பட்டு, வறட்சி நீங்கி, குதிகால் வெடிப்பு மறைய ஆரம்பிக்கும்.

வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றினை ஊற்றி, அக்கலவையில் பாதங்களை 10 நிமிடம் ஊற வைத்து, பிரஷ் கொண்டு தேய்த்துக் கழுவ வேண்டும். இப்படி வாரம் ஒருமுறை செய்து வர, பாதங்களில் உள்ள இறந்த தோல் வெளியேற்றப்பட்டு, பாதங்கள் மென்மையுடன் இருக்கும். குறிப்பாக இச்செயலை செய்த பின்னர், பாதங்கள் உலர்ந்ததும், நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயை பாதங்களுக்கு தடவுங்கள். இல்லாவிட்டால் வறட்சி இன்னும் அதிகமாகும்.

குதிகால் வெடிப்பை விரைவில் நீக்குவதற்கான எளிய வழிகளில் ஒன்று தான் இது. தினமும் இரவில் படுக்கும் முன் வெதுவெதுப்பான சோப்பு நீரில் பாதங்களை 15 நிமிடம் ஊற வைத்து, பின் பிரஷ் கொண்டு தேய்த்து கழுவ வேண்டும். இப்படி செய்து கால்களை நீரில் கழுவிய பின் உலர வைக்க வேண்டும். பின்பு 1 டீஸ்பூன் வேஸ்லின் மற்றும் 1 எலுமிச்சையின் சாற்றினை ஒன்றாக கலந்து, பாதங்களில் தடவி வர வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், குதிகால் வெடிப்பை ஒரே வாரத்தில் மறையச் செய்யலாம்.

கிளிசரினில் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, தினமும் அதனை பாதங்களில் தடவி வர, பாதங்களில் உள்ள வறட்சி நீங்கி, குதிகால் வெடிப்பும் மறைய ஆரம்பிக்கும். தினமும் இரவில் வெதுவெதுப்பான நீரில் 5 நிமிடம், குளிர்ந்த நீரில் 5 நிமிடம் என பாதங்களை ஊற வைக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் கால்களில் உள்ள சோர்வு நீங்கும். மேலும் 2 டீஸ்பூன் கிளிசரின், 2 டீஸ்பூன் ரோஸ் வாட்டர் மற்றும் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றினை ஒன்றாக கலந்து, பாதங்களில் தடவி வர வேண்டும். இதனை தொடர்ந்து செய்து வந்தால் விரைவில் நல்ல பலனை காணலாம்.



ALSO READ : வறண்ட சருமத்தைக் குளிர்ச்சியாக்கும் மாய்ஸ்சுரைசர்....

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்