நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

ஆரோக்கியமான தினை இடியாப்பம் செய்வது எப்படி?

நம் முன்னோர் அரிசி, கேழ்வரகு, கம்பு, வரகு, தினை ஆகியவற்றை உணவாக எடுத்துக் கொண்டனர். இதனால், அவர்களின் உடலானது தேக்கு மரம் போல் திடமாக இருந்தது. இன்று அவற்றில் தினை அரிசியின் நன்மைகளையும் அதில் எப்படி இடியாப்பம் செய்வது என்பதை பற்றியும் தெரிந்து கொள்ளலாம்.
இரும்பு சத்தின் அளவு, மற்ற தானியங்களை விட, குறிப்பாக, அரிசி, கோதுமை, ராகியை விட, தினையில் இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது. அத்தகைய தினை அரிசியில் இடியாப்பம் செய்வது எப்படி என்பதை தெரிந்து கொள்ளலாம். 


தேவையான பொருட்கள்


தினை மாவு - 250 கிராம்,

வெந்நீர் - 300 மி.லி.,

உப்பு - 2 டீஸ்பூன்,

அரிசி மாவு - 100 கிராம்.

தேங்காய்ப்பால் செய்ய...

முழு தேங்காய் - 1 (துருவியது),

ஏலக்காய்த்தூள் - 20 கிராம்,

கருப்பட்டி - 100 கிராம்.


செய்முறை

தேங்காய்த் துருவல், ஏலக்காய்த்தூள், கருப்பட்டி அனைத்தையும் சேர்த்து அரைத்து பால் எடுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தினை மாவு, அரிசி மாவு, உப்பு, வெந்நீர் சேர்த்து இடியாப்ப மாவு பதத்திற்கு பிசைந்து இடியாப்ப அச்சில் போட்டு பிழிந்து, இட்லி பானையில் 2 முதல் 3 நிமிடம் வரை வேக வைக்கவும். வெந்ததும் அரைத்த தேங்காய்ப் பாலுடன் பரிமாறவும்.







Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்