இனி ஃபேஸ்புக்கிலும் 'ரீல்ஸ்', அறிமுகப்படுத்தியது மெட்டா; காரணம் இதுதான்!
- Get link
- X
- Other Apps
உலகின் முன்னணி சமூக வலைதளமான ஃபேஸ்புக்குக்குப் போட்டியாக இருப்பது, சீனாவைச் சேர்ந்த டிக்டாக்தான்.
கடந்த 18 வருடங்களில் முதல் முறையாக ஃபேஸ்புக்கின் தினசரி பயனாளர்களின் எண்ணிக்கை கடந்த காலாண்டில் குறைந்திருந்தது. எப்போதுமே ஏறுமுகத்தில் இருந்த இந்த எண்ணிக்கை குறைந்தது, அமெரிக்கப் பங்குச்சந்தையிலும் எதிரொலித்தது. ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டாவின் பங்குகள் 20 சதவிகிதம் வரை வீழ்ச்சி கண்டன. உலகின் முன்னணி சமூக வலைதளமான ஃபேஸ்புக்குக்குப் போட்டியாக இருப்பது, சீனாவைச் சேர்ந்த பைட்டானஸ் நிறுவனத்தின் டிக்டாக் தான். 2020-ல் இந்தியாவில் தடை செய்யப்பட்ட அதே டிக்டாக் தான் உலக அளவில் ஃபேஸ்புக்குக்கு 'டஃப் பைட்' கொடுத்துக் கொண்டிருக்கிறது.
இந்தியா மட்டுமல்லாமல் உலக அளவில் கடந்த சில ஆண்டுகளில் பிரபலமானவை ஷார்ட் வீடியோக்கள். சமூக வலைதளங்களில், கட்டுரைகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வரிசையில் சமீபத்தில் பிரபலமானவே 30 நொடிகளுக்குள் இருக்கும் ஷார்ட் பார்மெட் வீடியோக்கள். டிக்டாக்கைத் தொடர்ந்து பல புதிய நிறுவனங்களும் டிக்டாக்கின் அதே பாணியைப் பின்பற்றி ஷார்ட் வீடியோக்களை ஷேர் செய்யும் வகையிலான செயலிகளை உருவாக்கி வெளியிட்டன. அதே பாணியை ஃபேஸ்புக் மற்றும் கூகுளும் தங்கள் செயலிகளில் பயன்படுத்தின. இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூபிலும் ஷார்ட் பார்மெட் வீடியோக்களை ஷேர் செய்யும் வகையில் புதிய வசதியை அளித்தன அந்நிறுவனங்கள்.
இந்தநிலையில் தான், பேஸ்புக்கின் சமீபத்திய இந்த வீழ்ச்சியினைத் தொடர்ந்து அதனை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல ஷார்ட் பார்மெட் வீடியோக்களையே கையில் எடுத்திருக்கிறது மெட்டா. இன்ஸ்டாகிராமில் இருக்கும் ரீல்ஸ் வசதியை ஃபேஸ்புக்கிலும் அறிமுகப்படுத்துகிறது மெட்டா.
பயனர்கள் அதிகம் பயன்படுத்தும் வசதியான ஷார்ட் பார்மெட் வீடியோ வசதியான ரீல்ஸை, ஃபேஸ்புக்கில் உலகின் 150 நாடுகளில் அறிமுகப்படுத்துவதாக நேற்று அறிவித்திருக்கிறது மெட்டா. மேலும், பயனர்கள் ஃபேஸ்புக்கில் செலவிடும் நேரத்தில் பாதி நேரத்தை வீடியோக்களிலேயே செலவிடுகின்றனர். எனவே, ஃபேஸ்புக் ரீல்ஸ் மூலமும் பணம் ஈட்ட புதிய வழிகளை அறிமுகப்படுத்தியிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது மெட்டா.
also read : வாட்சப்பில் ஆன்லைனில் இருந்து கொண்டே ஆப்லைன் மாற்றுவது எப்படி?
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment