நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

Weight Gain: உடல் எடையை அதிகரிக்கும் 5 பழக்கங்கள்! இதை தவிர்த்தால் ஒல்லியாகலாம்....

 Weight Loss Tips VS Lifestyle Habits: ஏன் எடை அதிகரிக்கிறது என்று தெரியவில்லையா? இந்த 5 வாழ்க்கை முறை பழக்கங்களை சரிசெய்தால் போதும். 


  • உடல் பருமனைத் தடுக்க தவிர்க்க வேண்டியவை
  • அன்றாட பழக்கத்தை மாற்றினால் உடல் எடை அதிகரிக்காது
  • சுறுசுறுப்பாக செயல்பட்டால், உடல் எடை சேராது


உங்கள் அன்றாட பழக்கவழக்கங்கள் நல்லதை விட உங்கள் ஆரோக்கியத்திற்கு அதிக தீங்கு விளைவிக்கின்றன என்பதை எப்படி அறிவது? நீங்கள் எடை கூடுவதை உணர்ந்தால், அதனால் ஏற்படக்கூடிய விளைவுகளையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும். உடல் எடை அதிகமானால், டைப் 2 நீரிழிவு, புற்றுநோய், உயர் இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் மற்றும் பிற உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படுவதற்கான ஆபத்து அதிகம். ஏன் எடை அதிகரிக்கிறது என்று தெரியவில்லையா? இந்த 5 வாழ்க்கை முறை பழக்கங்களை சரிசெய்தால் போதும். 
 
அதிக சர்க்கரை நுகர்வு

முதலில், உங்கள் உணவில் இருந்து சர்க்கரையை நீக்கவும், இனிப்பாக இருந்தாலும் சர்க்கரை உங்களுக்கு உண்மையிலுமே நல்லது செய்வதில்லை. உங்களுக்கு எதிரி சரக்கரை என்பதையும், உங்கள் நண்பர் அல்ல என்பதையும் புரிந்துக் கொள்ளுங்கள். எடை அதிகரிப்பதற்கு ஒரு பெரிய காரணம் சர்க்கரையை உணவில் சேர்த்துக் கொள்வதாகும்.

எப்போதாவது சில இனிப்புப் பொருட்களை சாப்பிடலாம் ஆனால் கண்டிப்பாக அதை தினசரி சாப்பிடக்கூடாது. அதிக இனிப்பு, அதிக சோகத்தையே கொடுக்கும்.

அதிகப்படியான ஆல்கஹால்

அதிகப்படியாக மது அருந்துவது, வாழ்க்கையை அனுபவிப்பது என்று நினைத்துக் கொண்டிருப்பவர்கள் இதை நன்றாக கவனித்துக் கொள்ளவும். அதிகமாக மது அருந்துவதால், பிற உடல் நலப் பிரச்சனைகளை மட்டும் அல்ல, சேர்ந்து எடை அதிகரிப்பிற்கும் வழிவகுக்கிறது. பலவிதமான மது பானங்களில் அதிக கலோரிகள் உள்ளன.


சீரற்ற உணவு

உணவைத் தவிர்ப்பது உடல் எடையை குறைக்க உதவும் என்று நீங்கள் நினைத்தால், நீங்கள் தவறாக நினைக்கிறீர்கள். ஒரு நாளைக்கு மூன்று வேளையும் சரியான நேரத்தில் சாப்பிட வேண்டும், ஆனால் குறைவாக உண்டாலே போதும். இது எடையை பராமரிப்பதில் இன்றியமையாத காரணியாகும். ஆரோக்கியமற்ற உணவு முறைகள் உங்கள் செரிமானம், குடல் ஆரோக்கியம் மற்றும் உங்கள் மன அழுத்தத்தை அதிகரிக்கும். 

தவறான உணவுகளை உட்கொள்வது
தவறான உணவுகளை அதிகமாக சாப்பிடுவது, உடல் எடையை அதிகரிக்கும். 
 
அதிகமாக டிவி பார்ப்பது
ஒன்றரை மணி நேரம் தொலைக்காட்சியைப் பார்ப்பது 3.5 கன சென்டிமீட்டர் கூடுதல் வயிற்றுக் கொழுப்பை ஏற்படுத்தும் என்பதைக் கேட்டால் நீங்கள் அதிர்ச்சியடையலாம். உட்கார்ந்தபடியே வேலை செய்யும் வாழ்க்கை முறையும் உடல் எடையை அதிகரிக்கும், சுறுசுறுப்பாக இருங்கள்! உடல் எடையை கட்டுக்குள் வையுங்கள். தொப்பையை வளர்க்காதீர்கள்...








Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

அசிடிட்டி பிரச்சனையில் இருந்து விடுபட சில எளிய டிப்ஸ்..!!

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு அறிவிப்பு: இன்று வெளியாகிறது!