நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

கொரோனாவால் கருவுறுதல் விகிதம் இந்த நாட்டில் குறைந்தது... கவலையில் அரசு...

கொரோனா பரவிய காலத்தில் குறைவான அளவிலேயே குழந்தைகள் பிறந்ததால் சிங்கப்பூர் கவலையில் ஆழ்ந்துள்ளது.
கொரோனா ஊரடங்கால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியால், பல நாடுகள் கவலையுற்றுள்ளன. ஆனால், சிங்கப்பூர் மட்டும் ஊரடங்கால் பெண்களின் கருவுறுதல் விகிதம் குறைந்துள்ளதாக கவலையில் ஆழ்ந்துள்ளது. உலக பணக்கார நாடுகளில் ஒன்றான, சிங்கப்பூரின் மொத்த மக்கள் தொகை வெறும் 57 லட்சம் மட்டுமே ஆகும்.

அந்நாட்டில். ஊரடங்கால் வேலை இழந்து பலர் வருமானம் இழந்துள்ளதால், 2019-ஐ காட்டிலும் கடந்த ஆண்டில் 10 சதவிகிதம் அளவிற்கு திருமணங்களின் எண்ணிகை குறைந்துள்ளது. பலர் குழந்தை பெற்றுக் கொள்ளும் முடிவை தள்ளி வைத்ததாகவும் கூறப்படுகிறது. குழந்தை வளர்ப்பில் உள்ள சிக்கல் காரணமாக இரண்டாவது குழந்தையை பெற்றுக்கொள்ள பலர் விரும்பவில்லை என்றும் தெரிகிறது. இதனால், சிங்கப்பூரில் பெண்கள் கருவுறுதல் விகிதம் 1.1 ஆக சரிந்துள்ளது.

மேலும், கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடந்த ஆண்டில், 38,705 குழந்தைகள் மட்டுமே பிறந்துள்ளன. இதன் காரணமாகவே, பெருந்தொற்று சமயத்தில் குழந்தையை பெற்றெடுப்பவர்களுக்கு, அரசு தரப்பில் 5,31,000 ரூபாய் ஊக்கத்தொகையாக அறிவிக்கப்பட்டது.
மேலோட்டமாக இது வேடிக்கையாகவே தெரிந்தாலும், உண்மையில் கருவுறுதலின் விகிதம் குறைவது, சிங்கப்பூரின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தையே காலி செய்துவிடும் ஆபத்தாக உருவாகி உள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.‘பிறப்பு விகிதம் குறைந்தால் எதிர்காலத்தில் வேலைக்கு செல்பவர்களின் எண்ணிக்கை, வெகுவாக குறையும் என அவர்கள் எச்சரித்துள்ளனர்.
இதனால் அரசுக்கான வரி வருவாய் குறைந்து, சுகாதாரம் உள்ளிட்ட முக்கிய துறைகளின் செலவுகள் பாதிக்கப்படுவதொடு, குடியேற்றக் கொள்கையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அறிவுறுத்துகின்றனர்.


Comments

Popular posts from this blog

கூகுள் மேப் மூலம் தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை டிராக் செய்யலாம்! எப்படி தெரியுமா?

விண்வெளியிலும் துணி துவைக்கலாம்! விண்வெளி நிலையத்திற்கு சலவை சோப்பு அனுப்பிய SpaceX......

Humanoid Robo : கோவிட் சேவையில் கலக்கப்போகும் புதிய ஹ்யூமனாய்டு ரோபோ..!