நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

Google அறிமுகப்படுத்தியுள்ள Freeze dried tabs: ஆண்ட்ராய்டு போன்களில் இன்னும் வேகமாகும் பிரவுசரின் செயல்திறன்!

 

Chrome 89 பெறும் இந்த புதிய அப்டேட் “Freeze dried tabs” என்று அழைக்கப்படுகிறது. இது பிரவுசரை முன்னெப்போதையும் விட வேகமாக பூட் செய்ய உதவுகிறது.


கூகுள் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்ட சுயவிவரங்கள், ரீடிங் லிஸ்ட் மற்றும் டெஸ்க்டாப்பிற்காக Chrome 89 ஐ அறிமுகப்படுத்தியது. இந்த நிலையில் விண்டோஸ் மற்றும் ஆண்ட்ராய்டு வெர்சன்களில் கூகுள் குரோம் பிரவுசரின் செயல்திறன் மற்றும் மெமரி எஃபிசியன்ஷியை மேம்படுத்த Chrome 89-க்கு மேலும் ஒரு புதிய அப்டேட்டை நிறுவனம் வெளியிட்டுள்ளது.

கடந்த காலங்களில் குரோம் பிரவுசரில் ஸ்லோ லோடிங் ஸ்பீட் மற்றும் கிராஷ் போன்ற பிரச்சனைகள் இருந்ததாக பல புகார்கள் (Flag) எழுந்தது. இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் சமீபத்திய Chrome 89-ல் மேம்படுத்தப்பட்ட மெமரி மேனேஜ்மென்ட், பிரவுசரை முன்பை விட 13% வேகமாக பூட் செய்ய உதவும் என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. Chrome 89 பெறும் இந்த புதிய அப்டேட் “Freeze dried tabs” என்று அழைக்கப்படுகிறது. இது பிரவுசரை முன்னெப்போதையும் விட வேகமாக பூட் செய்ய உதவுகிறது.

உங்கள் டிரைடு டேப்களை அதாவது ஓபன் செய்யப்பட்ட பயன்பாட்டில் இல்லாத டேப்களை ஒரு சிறப்பு இலகுரக பதிப்பில் சேமிக்கிறது. இது ஸ்க்ரோலிங், சூமிங் மற்றும் லிங்குகளை தட்டுதல் ஆகியவற்றிற்கான ஆதரவைப் பெறும் அதே சமயத்தில், ஸ்கிரீன் ஷாட் அளவுக்கு மட்டுமே சேமிப்பு இடத்தை எடுத்துக்கொள்ளும் என்று நிறுவனம் விளக்கியுள்ளது. இது குறித்து நிறுவனம் வெளியிட்டதாவது, "இந்த ஃப்ரீஸ்-டிரைடு டேப்களை நாங்கள் ஸ்டார்ட்-அப்பில் பயன்படுத்துகிறோம். அதே நேரத்தில் நீங்கள் பயன்படுத்தும் டேப்கள் பின்னணியில் லோடிங் செய்யப்படும். இது உங்களை விரைவாக உங்களுக்கு தேவையான பக்கங்களை அணுக அனுமதிக்கும்." என்று தெரிவித்துள்ளது.

கூடுதலாக, ரிசோர்ஸ் எக்ஸ்சாஷான் காரணமாக Android இல் செயலிழப்புகளின் எண்ணிக்கையை Chrome 89 உதவியுடன் குறைக்க முடிந்தது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. அதாவது மெமரி யூசேஜில் 5% முன்னேற்றம், 7.5% வேகமான ஸ்டார்ட்-அப் டைம்ஸ் மற்றும் 2% ஃபாஸ்டர் பேஜ் லோட்ஸ் ஆகியவை நிகழ்ந்ததாக கூறியுள்ளது. மேலும், எந்த சாதனங்கள் Chrome இன் 64-பிட் வெர்சனை பெறுகின்றன என்பதையும் கூகுள் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சமீபத்திய Android சாதனங்களை (Android Q + மற்றும் 8GB + RAM) உபயோகிக்கும் வாடிக்கையாளர்களுக்கு நாங்கள் Chrome-ஐ 64-பிட் பைனரியாக மீண்டும் உருவாக்கியுள்ளோம். அதில் பேஜ்கள் 8.5% வரை வேகமாக லோடிங் செய்யும் Chrome-ஐ உங்களுக்கு வழங்குகிறோம். அதேபோல ஸ்க்ரோலிங் மற்றும் உள்ளீட்டு தாமதத்திற்கு வரும்போது புதிய அப்டேட் 28% மென்மையானதாக இருக்கும், ” என்று கூகுள் கூறியுள்ளது.

ஆண்ட்ராய்டில் உள்ள குரோம் இப்போது எல்லா இடங்களிலும் PartitionAlloc-க்கைப் பயன்படுத்துகிறது என்றும் கூகுள் நிறுவனம் கூறியுள்ளது. சர்ச் நிறுவனத்தின் இந்த மேம்படுத்தப்பட்ட மெமரி அலோகேட்டர், குறைந்த ஒதுக்கீடு தாமதம், ஸ்பேஸ் ஏபிசியன்சி மற்றும் பாதுகாப்பிற்கு உகந்ததாகும். மேலும் புதுப்பிக்கப்பட்ட பிரவுசர், மெமரியை பயன்படுத்துவதால் மிகச் சிறந்ததாக செயல்படுகிறது. அதாவது முன்புற டேப் தீவிரமாகப் பயன்படுத்தாத மெமரியை நிராகரிப்பதன் மூலம் ஒரு டேபுக்கு 100MiB வரை பிரவுசர் மீட்டெடுக்கிறது. இதனால், பிரவுசரின் லோடிங் ஸ்பீட் அதிகரிக்கும்.

இது குறித்து நிறுவனம் குறிப்பிட்டுள்ளதாவது, " உங்கள் ஒவ்வொரு சாதனத்திலும் வேகமான மற்றும் சக்திவாய்ந்த பிரவுசரை உங்களுக்குக் கொண்டு வருவதற்கு எங்கள் குழுக்கள் எப்போதும் கடுமையாக உழைத்து வருகின்றன. இந்த செயல்திறன் மேம்பாடுகளை உங்களுக்குக் கொண்டு வருவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம், மேலும் பல அப்டேட்டுகளை வெளியிட உள்ளோம். எனவே காத்திருங்கள்." என்று கூறியுள்ளது.



Comments

Popular posts from this blog

கூகுள் மேப் மூலம் தொலைந்து போன ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை டிராக் செய்யலாம்! எப்படி தெரியுமா?

120 ஆண்டுகள் வாழும் மக்கள்! நோயா? அப்படின்னா என்ன?

பாம்புக்கே தண்ணி காட்டறதுன்னா இது தானா ... !!!