நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

தூங்கும்போது எத்தனை முறை சுவாசிக்கிறீர்கள்? இந்த வாட்ச் உங்களுக்கு சொல்லிடும்

உங்கள் சுவாசத்தின் எண்ணிக்கையை தெரிந்து கொள்ள, மொபைலை ஸ்லீப்பிங் மோடில் வைக்க வேண்டும்.


ஆப்பிள் வாட்ச் யூசர்களாக நீங்கள் இருந்தீர்கள் என்றால், ஓர் இரவில் தூங்கும்போது எத்தனை முறை சுவாசிக்கிறீர்கள் என்பதை துல்லியமாக தெரிந்து கொள்ள முடியும். ஆப்பிள் வாட்சிலேயே இன்பில்டாக கொடுக்கப்பட்டிருக்கும் இந்த அக்சலெரோமீட்டரில் (accelerometer) இந்த டேட்டா பதிவாகும். ஐபோனில் இருக்கும் ஹெல்த் ஆப் மூலம் கனெக்ட் செய்து உங்களின் சுவாச எண்ணிக்கையை எளிதாக தெரிந்து கொள்ளலாம்.

இந்த அருமையான வசதி மூலம் சுவாசம் சார்ந்த பிரச்சனைகள் அல்லது ஏதேனும் உடல் உபாதைகளால் பாதிக்கப்படுள்ளீர்கள் என்பதை அறிந்து, அதற்கேற்ப முன்கூட்டியே சிகிச்சை எடுத்துக்கொள்ள முடியும். அன்றைய பொழுது, வாரம், மாதம் மற்றும் வருடம் ஆகிய அளவில் உங்களின் சுவாசிக்கும் டேட்டாவை தெரிந்து கொள்ளலாம். ஆனால், ஆப்பிள் நிறுவனத்தின் குறிப்பிட்ட சில சீரிஸ் வாட்சுகளில் மட்டுமே இந்த ஆப்சன் கிடைக்கிறது. ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 6, ஆப்பிள் எஸ்.இ, ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 3,4 &5 -களில் கிடைக்கிறது. இந்த சீரிஸ் இல்லாத மற்ற ஆப்பிள் நிறுவன வாட்சுகளில் இந்த வசதி இல்லை.

உங்கள் சுவாசத்தின் எண்ணிக்கையை தெரிந்து கொள்ள, மொபைலை ஸ்லீப்பிங் மோடில் வைக்க வேண்டும். இரண்டு வழிகளில் சுவாசத்தின் எண்ணிக்கையை கணக்கிடலாம். மேனுவலாக ஹெல்த் ஆப்பில் செட்டிங்ஸ் செய்வது. மற்றொன்று ஷெட்யூல் செய்துவைத்துவிட்டால், நாள்தோறும் அந்த நேரத்தில் இருந்து உங்களின் சுவாச எண்ணிக்கை ஹெல்த் ஆப்பில் பதிவாகத் தொடங்கிவிடும்.

மேனுவலாக ஹெல்த் ஆப்பில் செட்டிங்ஸ் செய்வது எப்படி? என்பதை பார்க்கலாம்.

Step 1: மொபைலில் உள்ள கன்ட்ரோல் பேனலுக்கு (control panel) செல்ல வேண்டும்.

Step 2: bed ஐகானைத் தேர்ந்தெடுத்து, அதில் உள்ள half moon ஐகானை ஆக்டிவேட் செய்தால், ஸ்லீப் மோட் ஆக்டிவேட் ஆகும். மாறாக, Do Not Disturb மோடையும் ஆக்டிவேட் செய்யலாம்.

நாள்தோறும், குறிப்பிட்ட நேரத்தில் இருந்து உங்கள் சுவாச எண்ணிக்கையை தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், ஏற்கனவே கூறியதுபோல் ஷெட்யூல் செய்து வைத்துக்கொள்ளலாம். அந்த நேரத்தில் இருந்து சரியாக உங்களின் சுவாச எண்ணிக்கை பதிவாக தொடங்கிவிடும். ஷெட்யூல் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்.

Step 1: ஹெல்த் ஆப்-ஐ திறக்க வேண்டும்.

Step 2: browse option - தேர்ந்தெடுத்து Sleep option -ஐ டைப் செய்து Search செய்யுங்கள்

Step 3: ஸ்லீப் பேஜில் கீழே சென்று பார்க்கும்போது ‘Your Schedule.’ என்ற ஆப்சன் இருக்கும்

Step 4: அதில், நீங்கள் தூங்கும் நேரம் மற்றும் எழும் நேரத்தை பிக்ஸ் செய்து விடுங்கள்.

Step 5: அதில் ஓகே கொடுத்தவுடன், நாள்தோறும் அந்த நேரத்தில் உங்களுடைய சுவாச எண்ணிக்கை பதிவாகத் தொடங்கிவிடும். இந்த நேரங்களில் ஆப்பிள் வாட்சும் ஸ்லீப்பிங் மோடில் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

டேட்டாவை செக்செய்து கொள்வது எப்படி? என்பதை பார்க்கலாம்.

Step 1: ஹெல்த் ஆப்புக்குள் செல்லுங்கள் (Health app)

Step 2: ‘respiratory’ என்ற ஆப்சனை தேர்ந்தெடுங்கள்

Step 3: அதில், ‘Show More Respiratory Rate Data’ என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும்.

Step 4: இப்போது, உங்களின் சுவாச எண்ணிக்கை தொடர்பான அனைத்து தரவுகளும் புள்ளிவிவரங்களுன் திரையில் கொடுக்கப்பட்டிருக்கும்.



 

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்