உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இருப்பவர்களுக்கு சைவ உணவுகள் மிகச் சிறந்த டையட் ஆகும்.
தாவர வகைகளில் இருந்து தயாரிக்கப்படும் அனைத்து உணவுகளும் சைவ உணவுகள். விலங்குகள் மூலம் கிடைக்கும் உணவுகள் அசைவ உணவுகள். Vegan டையட்டில் தாவரத்தில் இருந்து கிடைக்கும் உணவுகள் மட்டுமே இடம்பெறும். இறைச்சிகள் மட்டுமல்லாமல், விலங்களிடம் இருந்து கிடைக்கும் பால், முட்டை கூட இந்த டையட்டில் இடம்பெறாது. சைவ உணவுகளில் ஏராளமான ஊட்டச்சத்துகள் இருக்கின்றன.பாரம்பரியமாக சைவ உணவுகள் உணவுப் பயன்பாட்டில் இருந்தாலும், அண்மைக் காலமாக உலகளவில் சைவ உணவுகள் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது. இறைச்சி மற்றும் அதன் கழிவுகள் புவி வெப்பமயமாதலுக்கும் காரணமாக இருப்பதால், அதனை உணவில் இருந்து தவிர்க்க வேண்டும் என்ற குரல்களும் எழத் தொடங்கியிருக்கிறது. இதில் பல்வேறு சர்ச்சைகள் இருக்கும் நிலையில், சைவ உணவை மட்டும் எடுத்துக்கொள்ளும்போது இதய நோய் மற்றும் புற்றுநோய் பாதிப்புகளில் குறைவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.மேலும், உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இருப்பவர்களுக்கு சைவ உணவுகள் மிகச் சிறந்த டையட் ஆகும். இது குறித்து ஆய்வு ஒன்றை மேற்கொண்ட அமெரிக்கன் ஹார்ட் அசோஷியேஷன் மற்றும் அமெரிக்கன் டயாபடீஸ் அசோஷியேஷன் (ADA), எடை இழப்புக்கு சைவ உணவுகள் சிறந்த டையட் எனக் கூறியுள்ளது. சைவ உணவுகளில் குறைவான கலோரிகள் இருப்பதால் எடையை சீராக பராமரிக்க உதவுவதாகவும், அதில் நார்ச்சத்து அதிகம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
மிகவும் ஆபத்தான டைப் 2 நீரிழிவு நோய் ஏற்படுவதில் இருந்து பாதுகாப்பு வழங்கும் சைவ உணவுகள், ரத்தத்தில் இன்சுலின் சுரப்பை சமப்படுத்துவதிலும் முக்கிய பங்காற்றுகின்றன. சைவ உணவுகளை எடுத்துக்கொள்பவர்கள் உயர் ரத்த அழுத்த பாதிப்பில் 75 விழுக்காடு ஏற்பட வாய்ப்பில்லை எனத் தெரிவித்துள்ளது. இதய நோய் அபாயத்தை 42 விழுக்காடு குறைக்கிறது. மேலும், கீழ்வாதம், புற்றுநோய், அல்சைமர் போன்ற நோய்களையும் சைவ உணவு டையட்டை பின்பற்றுவதன் மூலம் தடுக்கலாம் என பல்வேறு ஆய்வுகள் தெரிவித்துள்ளன.
இதனால் அசைவ உணவுகளில் கிடைக்கும் நன்மைகளை விட சைவ உணவுகள் உடல் ஆரோக்கியத்தில் பெரும் பங்கை வகிப்பதால், அந்த டையட்டை பின்பற்றலாம் என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
அண்மைக்காலமாக, புற்றுநோய், இதயம், கிட்னி, கல்லீரல் பாதிப்புகள் கனிசமான அளவில் உயர்ந்து வருகிறது. முன்பை விட இவை அதிகமாக இருப்பதற்கு முக்கிய காரணம் வாழ்க்கை முறை மற்றும் உணவு முறையில் ஏற்பட்டுள்ள மாற்றம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த பாதிப்புகளில் இருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றால், உணவு மற்றும் உடற்பயிற்சிகளில் கவனம் செலுத்த வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
Comments
Post a Comment