நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

என்ன செஞ்சாலும் வெயிட் குறையலையா; லவங்க டீ ட்ரை பண்ணுங்க..!!!

 நறுமணத்திற்கு பயன்படுத்தப்படும் மசாலா பொருளான, இலவங்கப்பட்டை அல்லது லவங்கத்தில் மாங்கனீசு, இரும்பு, நார், கால்சியம் மற்றும் வைட்டமின் கே ஆகியவை நிறைந்துள்ளது.


Cinnamon Tea for Weight Loss:

 இப்போது பண்டிகை காலம் என்பதால், விருந்துக்கு குறைவே இல்லை. அதனால், உடல் எடை அதிகரிக்கும் வாய்ப்பு தான் அதிகம். ஆனால் நீங்கள் சில எளிய பழக்கங்களை கடைபிடித்து வந்தால், பண்டிகை காலத்தில் மட்டுமல்ல எப்போதுமே உடல் எடையை கட்டுக்குள் வைக்கக்கலாம் . அதில் ஒன்று இரவில் இலவங்கப்பட்டை தேநீரை உட்கொள்வது. இது உடலில் உள்ள நாள்பட்ட  கொழுப்பை நீக்கும்.
நறுமணத்திற்கு பயன்படுத்தப்படும் மசாலா பொருளான, இலவங்கப்பட்டை அல்லது லவங்கத்தில் மாங்கனீசு, இரும்பு, நார், கால்சியம் மற்றும் வைட்டமின் கே ஆகியவை நிறைந்துள்ளது. இந்த சக்திவாய்ந்த மசாலா உலகெங்கிலும் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. நீண்ட காலமாக உடல் எடையை குறிக்க எடுத்த முயற்சிகள் பலனளிக்காமல் போன்வர்கள் இதனை முயற்சி செய்யலாம். மேலும் வியக்கத்தக்க ஆரோக்கிய நன்மைகளுக்காகவும் பெயர் பெற்றது.  

எடை இழப்புக்கு இலவங்கப்பட்டை தேநீர் எவ்வாறு உதவும்?

இலவங்கப்பட்டை தேநீரில் அதிக ஊட்டச்சத்துக்கள் உள்ளன, மேலும் வளர்சிதை மாற்றத்தை (metabolism) அதிகரிக்க உதவுகிறது. மேலும், உங்கள் கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கும். அதன் அழற்சி எதிர்ப்பு பண்புகள் காரணமாக, உடலின் வீக்கத்தை குறைக்க உதவுகிறது. மேலும் செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் கலோரிகளை எரிக்கவும் முக்கிய பங்களிக்கும். 

ஊட்டச்சத்து நிபுணர் டாக்டர் ஆன்ந்த் சூத் இது குறித்து தனியார் தொலைகாட்டிக்கு அளித்து பேட்டியின் போது கூறுகையில், “இலவங்கப்பட்டை உடலின் வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்க பெரிது உதவுகிறது. பல நேரங்களில், ஒரு நபரின் இன்சுலின் எதிர்ப்பு சக்தியாக மாறும்போது, ​​சர்க்கரை வளர்சிதை மாற்றமடையாது, அது கொழுப்பாக மாற்றப்படுகிறது. இலவங்கப்பட்டை இன்சுலினைத் தூண்டவும், உட்கொண்ட உணவுகளிலிருந்து சர்க்கரையை வளர்சிதை மாற்றத்திற்கு உட்படுத்தவும் உதவும்” என்றார்.

இலவங்கப்பட்டை தேநீர் தயாரிக்கும் முறை:

தேவையான பொருட்கள்:

1 கப் தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள்
1 தேக்கரண்டி இலவங்கப்பட்டை பொடி அல்லது அரை அங்குல இலவங்கப்பட்டை குச்சியை எடுத்துக் கொள்ளுங்கள்
1 தேக்கரண்டி தேன்
1/4 தேக்கரண்டி கருப்பு மிளகு தூள்
1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு
 

செய்முறை:

இலவங்கப்பட்டை பொடி அல்லது இலவங்கப்பட்டை, கருப்பு மிளகு தூள் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து 
கலவை நன்றாக கொதித்தவுடன்  தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலக்கவும். பானத்தை வடிகட்டி சூடாக குடிக்கவும்.

இதை உங்கள் தினசரி உணவில் சேர்த்தால், உடல் எடை குறைவதோடு,  உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். இது கொரோனா காலத்தில் மிகவும் தேவையான ஒன்று. படுக்கை நேரத்தில் இலவங்கப்பட்டை தேநீர் குடிப்பது உங்கள் சோர்வடைந்த தசைகளை தளர்த்தி, கொழுப்பை எரிக்கும்.


ALSO READ : குழந்தைகளின் எலும்புகளை வலுவாக்கும் ‘ஸ்பெஷல்’ மோர்; தயாரிப்பது எப்படி

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்