நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

கணவருக்கு சிலை அமைத்த மனைவி

 கணவரின் எதிர்பாராத மரணம் மனைவியை நிலைகுலைய செய்துவிடும். மீளா துயரத்தில் ஆழ்த்திவிடும்.


அதில் இருந்து மீள்வதற்கு, கணவர் தன்னை விட்டு பிரியவில்லை என்று அவர் நினைவாகவே வாழ்வதுதான் மன ஆறுதல் தரும் விஷயமாக இருக்கும். கணவரின் நினைவாக வாழும் பெண்களுக்கு மத்தியில், இறந்த கணவருக்கு கோவில் கட்டி பிரார்த்தனை செய்து வருகிறார், பத்மாவதி.

இவர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர். கடந்த 4 வருடங்களுக்கு முன்பு இவருடைய கணவர் விபத்தில் இறந்துவிட்டார். அந்த இழப்பை தாங்கிக்கொள்ள முடியாமல் வேதனையில் துடித்தவர் கணவரின் நினைவாக கோவில் கட்டிவிட்டார். அதில் கணவரின் உருவத்தை பளிங்கு சிலையாக வடிவமைத்து நிறுவி இருக்கிறார். கணவரின் பிறந்தநாள் உள்பட விசேஷ நிகழ்ச்சிகளின்போது சிலைக்கு பூஜை செய்கிறார்.

ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று கணவரின் கோவிலில் ஏழைகளுக்கு உணவு வழங்குகிறார். ‘‘கணவர் இறந்து சில நாட்கள் கடந்த நிலையில் அவர் என் கனவில் தோன்றினார். தனக்கு கோவில் கட்டுமாறு கூறினார்’’ என்று தான் கணவருக்கு கோவில் கட்டியதற்கான காரணத்தை விளக்குகிறார். கணவர் உயிருடன் இருந்தபோதும் அவர் தனக்கு கடவுள் போன்றவராகத்தான் தெரிந்தார் என்றும் சொல்கிறார்.

பத்மாவதியின் தாயார், அவரது கணவரை தினமும் வணங்கும் வழக்கத்தை பின்பற்றி இருந்திருக்கிறார். அப்படி அப்பாவை வணங்குவதை பார்த்து வளர்ந்ததால் தனக்கு இயல்பாகவே கணவருக்கு அப்படிப்பட்டமரியாதையை கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் வெளிப்பட்டதாகவும் கூறுகிறார்.

கர்நாடகாவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் கடந்த ஆண்டு, புது வீட்டுக்கு கிரகப்பிரவேசம் நடத்தியபோது, இறந்த மனைவியின் நினைவாக அவரது சிலையை வீட்டுக்குள் நிறுவி இருந்தார். வாழ்வின் முக்கியமான தருணங்களில் மனைவி தன்னுடன் இருப்பதை உறுதி செய்து கொள்வதற்காக அவரை சிலையாக வடிவமைத்ததாக கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.



Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்