Pink Dolphin: இளஞ்சிவப்பு டால்பினின் அற்புதமான தோற்றம்! இணையத்தில் வைரல்
- Get link
- X
- Other Apps
இளஞ்சிவப்பு டால்பின்களை பார்ப்பது மிகவும் அரிதான காட்சி, நீங்கள் எப்போதாவது அதைப் பார்த்தால், நீங்கள் உண்மையில் நீங்கள் அதிர்ஷ்டசாலி தான்...
நீங்கள் டால்பினை பார்த்திருக்கலாம். ஆனால் இளஞ்சிவப்பு நிற டால்பினை பார்த்ததுண்டா? இந்த அரிய காட்சி சமூக ஊடகங்களில் வைரலாகிறது. வைரலாவதோடு, பலரின் மனதையும் மகிழ்விக்கிறது.
இந்த வீடியோ பலரின் அபிமானத்தையும் பெற்று, பரவலாக பகிரப்படுகிறது. அரிய இளஞ்சிவப்பு டால்பின் வைரல் வீடியோவை பார்க்கும் நெட்டிசன்கள், "நம்பமுடியாதது", "அற்புதமானது", "அபாரமானது", "அருமையானது" என பலரும் பாராட்டுகின்றனர்.
"இயற்கையிலிருந்து நாம் பெற்ற அற்புதமான பரிசுகளில் ஒன்று இது" என்றும் ஒருவர் கருத்து வெளியிட்டுள்ளார்.
இளஞ்சிவப்பு டால்பின்களை பார்ப்பது மிகவும் அரிதான காட்சி, நீங்கள் எப்போதாவது அதைப் பார்த்தால், நீங்கள் உண்மையில் நீங்கள் அதிர்ஷ்டசாலி தான். இதுவரை இளஞ்சிவப்பு டால்பின் பற்றி கேள்விப்பட்டதில்லையா? இல்லை கூகுளில் தேடி விஷயத்தை தெரிந்து வைத்திருக்கிறீர்களா?
ஆனால், இளஞ்சிவப்பு டால்பின் கடலில் டைவிங் செய்யும் வீடியோவை பார்த்ததுண்டா? அப்படியொரு வீடியோ இப்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவை ட்விட்டர் பயனர் ஒருவர் சோலோ பாரா கியூரியாசோஸ் (Solo para curiosos) என்ற பெயரில் டிவிட்டரில் கணக்கு வைத்திருக்கும் பயனர் பகிர்ந்து கொண்டார்.
அந்த வீடியோவுக்கு, "டெல்ஃபைன்ஸ் ரோசா (இளஞ்சிவப்பு)" என்று தலைப்பிட்டார். இந்த வீடியோவை இந்திய வன சேவை (ஐஎஃப்எஸ்) அதிகாரி சுசந்தா நந்தா (Susanta Nanda) பகிர்ந்துள்ளார்.
அரிய இளஞ்சிவப்பு டால்பின் வீடியோவை பார்த்து ஆச்சரியமடையும் பயனர் ஒருவர், "இது மரபணு மாற்றமா அல்லது சில வகையான ஆல்காக்கள் இளஞ்சிவப்பு நிறமாக தோன்றுமா" என்று கேள்வி எழுப்பினார். மற்றொருவர், "அவர்கள் அமேசான் நதி இளஞ்சிவப்பு டால்பினின் இளஞ்சிவப்பு நிறம் கடினமான விளையாட்டுகள் அல்லது சண்டையின் விளைவாக திசுக்களில் ஏற்படும் வடுக்களால் ஏற்படுகிறது" என்று எழுதியுள்ளார்.
இந்த இயற்கையான இளஞ்சிவப்பு டால்பின்கள், இயற்கையின் பாதுகாப்புக்கான சர்வதேச சங்கத்தால் "அரிய வகை உயிரினம்" என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. அவற்றின் எண்ணிக்கை, காலநிலை மாற்றம், மாசுபாடு, கப்பல்களில் மோதுவது, மீன்பிடிக்கும் தொழில் விரிவாக்கம், நீருக்கடியில் ஒலி மாசுபாடு ஆகியவற்றால் டால்பின்களின் வாழ்க்கைக்குக் அச்சுறுத்தல் ஏற்படுகிறது.
ALSO READ : திடீரென பிங்க் நிறத்திற்கு மாறும் ஏரிகள்... காரணம் என்ன?
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment