குளிர்ச்சியான மற்றும் வெப்பமான காற்று மேகக்கூட்டங்களில் இருக்கும். இரண்டும் ஒன்றோடொன்று சந்திக்கும்போது வெப்பக் காற்று மேலே சென்று இடியை உருவாக்கும் மேகங்களை உருவாக்குகிறது.
மின்னல் எப்படி உருவாகிறது? என்ற கேள்விக்கு பலர் விடையளிக்க முயற்சி செய்திருக்கிறார்கள். அவர்கள் சொல்வது உண்மையா? இல்லையா? என்பது குறித்து அறிவியல் சொல்லும் காரணங்களை பார்க்கலாம். முதன் முதலாக அமெரிக்காவைச் சேர்ந்த அறிவியலாளர் பெஞ்சமின் பிராங்கிளின் மின்னல் எப்படி உருவாகிறது? என்பதையும், அதில் மின்சாரம் இருக்கிறது என்பதையும் நிறுவ முயன்றார். அதற்காக மழைபெய்யும் போது பட்டம் ஒன்றை செய்து அதனுடன் உலோக கம்பியை இணைந்து பரிசோதனை மேற்கொண்டார். அப்போது, மின்னல் அடிக்கும்போது உலோக கம்பி வழியே அதிர்வை உணர்ந்த அவர், மின்சாரம் இருகிறது என்பதை உறுதி செய்தார்.மின்னல் எப்படி உருவாகிறது?குளிர்ச்சியான மற்றும் வெப்பமான காற்று மேகக்கூட்டங்களில் இருக்கும். இரண்டும் ஒன்றோடொன்று சந்திக்கும்போது வெப்பக் காற்று மேலே சென்று இடியை உருவாக்கும் மேகங்களை உருவாக்குகிறது. குளிர்ச்சியான காற்று பனிப்படிகங்களாக மேகத்தில் இருக்கும். பேட்டரியைப்போல் பிளஸ் மற்றும் மைனஸ் முனைகளைப் பெற்றிக்கும் அந்தக் மேகக் கூட்டங்கள், மழைக்காலத்தில் காற்று வேகமாக அடிக்கும்போது ஒன்றோடொன்று உரசிக்கொள்ளும். மேல் பகுதியில் இருக்கும் நேர்மறை ஆற்றல், கீழ் பகுதியில் இருக்கும் எதிர்மறை முனைக்கு ஆற்றலைக் கடத்தும்போது மின்னல் வெளிப்படுகிறது. இந்த நிகழ்வின்போது உருவாகும் சூடான காற்று பலத்த சத்தத்துடன் இடியை உருவாக்குகிறது.மின்னல் மற்றும் இடியில் பாதுகாப்பாக இருப்பது எப்படி?மழைக்காலங்களில் வேகமாக காற்றுவீசும்போது இடி, மின்னல் உருவாகும். அப்போது திறந்தவெளியில் இருக்கக்கூடாது. மரங்களுக்கு அடியில் நிறக்கக்கூடாது. ஏனென்றால் பச்சை மரங்கள் மின்கடத்தியாக இருப்பதால், மின்சாரம் அதன்வழியே நிலத்தில் இறங்கும். கட்டடங்களுக்குள் இருப்பது பாதுகாப்பானது. மழை பெய்யும்போது நீச்சல் அடித்துக்கொண்டிருந்தால், நீரில் இருந்து வெளியேறிவிட வேண்டும். மழை வருவதற்கு சிறிது நேரம் இருப்பதாக கருதினாலும், மின்னல் முன்கூட்டியே வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன.வீட்டில் இருக்கும் மின்சாதனங்களை உடனடியாக ஆஃப் செய்துவிடுவது பாதுகாப்பானது. குறிப்பாக, மொபைல் போன் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இரும்பு உள்ளிட்ட பொருட்களை இடி இடிக்கும்போது எடுத்துச் செல்ல வேண்டாம். மழைக்காக பயன்படுத்தும் குடை கூட ஆபத்தானது. ஆய்வாளர்களின் கூற்றுப்படி, நம் கண்களுக்கு ஒரே ஒருமுறை மட்டும் மின்னல் தெரியலாம். ஆனால், அவை நொடிப்பொழுதில் தொடர்ச்சியாக 25 முறைவரை கூட மின்னும் என கூறுகின்றனர். இதனால் ஏற்படும் இடி மிகவும் பயங்கரமானதாக இருக்கும், கண்ணிமைக்கும் நேரத்தில் அவற்றின் செயல்பாடு முடியும் என எச்சரிக்கின்றனர்.
பெஞ்சமின் பிராங்களின் மின்னலில் மின்சாரம் இருப்பதாக கூறியதை பலரும் முதலில் நம்பவில்லை. ஆனால், தொடர்ச்சியான ஆய்வுகள் மூலம் அதனை நிரூபித்துக்காட்டினார். மின்னல் சார்ந்து அவர் மேற்கொண்ட ஆய்வுகள் இன்றைய வானியல் ஆய்வுக்கும் பயன்பட்டு வருகிறது.
Comments
Post a Comment