பருவமழை காலத்தில் கூட உங்கள் சருமம் பொலிவுடன் இருக்க உதவும் சில எளிய டிப்ஸ்கள் இதோ..
பருவமழை காலம் நாம் அனைவருக்கும் உற்சாகமாக காணப்பட்டாலும், அது நம் சருமம் மற்றும் கூந்தலுக்கு உகந்ததாக இருக்காது. காற்றில் மாசு ஏற்படுவதோடு வானிலை மாற்றமும் உங்கள் சருமத்தை வறண்டு, சீரற்றதாக ஆக்குகிறது. இயற்கையாகவே வறண்ட தன்மை கொண்ட முகம் உடையவர்களுக்கு, மழைக்காலத்தில் முகம் இன்னும் வறண்டு காணப்படும். தற்போது மழைக்காலம் தொடங்க இருப்பதால், உங்கள் சரும பராமரிப்பு முறைகள் குறித்து நீங்கள் தெரிந்து கொள்வது அவசியம். இந்த பருவமழை காலத்தில் கூட உங்கள் சருமம் பொலிவுடன் இருக்க உதவும் சில எளிய டிப்ஸ்கள் குறித்து தெரிந்துக்கொள்ளுங்கள்.
உங்கள் சருமத்தை சுத்தம் செய்யவும் :பருவமழை காலத்தில் உங்கள் சருமத்தை தவறாமல் சுத்தம் செய்வது அவசியமானது. இதற்கு உங்கள் சருமத்தை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும் வகையிலான க்ளென்சரை தேர்வு செய்யவும். உங்களுடைய சருமத்திற்கு ஏற்ற வகை க்ளென்சர் நிறையவே இருக்கிறது என்பதால் அதனை சரியாக தேர்ந்தெடுத்து பயன்படுத்துங்கள். டோனர் பயன்படுத்துங்கள் : உங்கள் சருமத்தை ஒளிரச் செய்வதற்கான மற்றொரு முக்கியமான விஷயம் டோனர் பயன்படுத்துவது தான். டோனர் பயன்படுத்துவதால் உங்கள் சருமத்தில் உள்ள பிசுபிசுப்புத்தன்மை நீங்கி, உடனடி புத்துணர்ச்சி உணர்வை வழங்கும். மேலும் உங்கள் சருமத்தை மென்மையாக்கி, உடனடி பிரகாசத்தை வழங்கும். குறிப்பாக உங்கள் சருமம் எப்போதும் நீரேற்றமாக இருக்க டோனர் உதவும். ரோஸ் வட்டாரை கூட டோனராக பயன்படுத்தலாம். மாய்ஸ்சரைசர் பயன்படுத்துங்கள் : பகலில் உங்கள் சருமத்தை ஈரப்பதமாகவும், பளபளப்பாகவும் வைத்திருங்கள். மழைக்காலங்களில் கூட, உங்கள் சருமத்திற்கு மாய்ஸ்சரைசர் தேவைப்படுகிறது. எனவே SPF 15 கொண்ட ஒரு மாய்ஸ்சரைசரை தேர்ந்தெடுத்து பயன்படுத்துவது உங்கள் சரும ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவுகிறது. இது 24 மணிநேர நீரேற்றத்தை வழங்க உதவுகிறது மற்றும் சூரிய ஒளியில் இருந்து சருமத்தைப் பாதுகாக்கும். மேலும் தினமும் மாய்ஸ்சரைசர் பயன்படுத்துவதால் உங்கள் சருமத்தில் உள்ள கரும்புள்ளிகளின் தோற்றம் கொஞ்சம் கொஞ்சமாக குறையும். நைட் க்ரீம் பயன்படுத்துங்கள் : ஹைலூரோனிக் அமிலம் மற்றும் நியாசினமைடு அடிப்படையிலான சரும தயாரிப்பு பொருட்கள் உங்கள் சருமத்தை ஈரப்பதமாக்கி, புத்துணர்ச்சியூட்டுகிறது. எனவே உங்களுக்கு தேவையான நைட் க்ரீமைத் தேர்ந்தெடுக்கும்போது, ஹைலூரோனிக் அமிலம், நியாசினமைடு இவற்றில் ஏதேனும் ஒன்று இருக்கும் வகையில் ஒன்றைத் தேர்ந்தெடுப்பது அவசியம். அதே நேரத்தில் சருமத்தின் ஈரப்பதத்தை பாதுகாத்து, பிரகாசமான சருமத்திற்கு உதவுகிறது. நைட் க்ரீம் மட்டுமின்றி, தினமும் சீரம் பயன்படுத்துவதும் சருமத்திற்கு நல்லது. தினமும் இரவு உங்கள் சருமத்தை நன்கு சுத்தம் செய்த பின்னர் சீரம் அப்ளை செய்துவிட்டு தூங்குங்கள். மறுநாள் காலையில் கழுவிவர நல்ல பலன் கிடைக்கும்.
Comments
Post a Comment