நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

ஒருநாள் கைதியாக இருக்க ரூ.500!

 கர்நாடக மாநிலம் பெலகாவியில் இருக்கும் ஹின்டல்கா சிறை நிர்வாகம் ரூ. 500 செலுத்துவதன் மூலம் ஒரு நாள் முழுவதும் கைதியாக தங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது. 


Karnataka கர்நாடக மாநிலம் பெலகாவியில் இருக்கும் ஹின்டல்கா சிறை நிர்வாகம் ரூ. 500 செலுத்துவதன் மூலம் ஒரு நாள் முழுவதும் கைதியாக தங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது. 

சிறை வாழ்க்கை எப்படி இருக்கும் என்று தெரிந்துகொள்ள அனைவருக்கும் ஆர்வம் இருக்கும்.  அதை இப்போது நிறைவேற்றியுள்ளது கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹிண்டல்கா சிறை நிர்வாகம்.  கர்நாடக மாநிலம் பெலாகாவியில் உள்ள ஹிண்டல்கா மத்திய சிறை அதிகாரிகள் ஒரு நாள் சுற்றுலா திட்டமாக, கைதியின் வாழ்வில் ஒரு நாள் என்ற பெயரில் ரூபாய் 500 கட்டணம் செலுத்தி 24 மணிநேரம் சிறைச்சாலையில் இருக்கலாம் என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர்.  ஒரு நாள் முழுவதும் சிறையில் எந்த சலுகைகளும் இன்றி கைதி எண், சீருடை, உணவு, சமையல், தோட்ட வேளைகள் என கைதிகள் போலவே அவர்கள் நடத்தப்படுவார்கள்.  இந்த முயற்சியை செயல்படுத்த அரசாங்கத்தின் ஒப்புதலுக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

கட்டணம் செலுத்தி உள்ளே வருபவர்கள் மற்ற சக கைதிகளை போலவே நடத்தப்படுவார்கள் என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர். சிறைக்காவலர்கள் பார்வையாளர்களை அதிகாலை 5 மணிக்கு எழுப்புவார்கள் என்றும் காலை தேநீர் அருந்துவதற்கு முன் தங்கள் இடங்களை அவர்கள் சுத்தம் செய்ய வேண்டுமெனவும் அதன்பிறகு காலை உணவு வழங்கப்படும் எனவும் தெரிவித்தனர். 

பிறகு மதிய உணவு வழங்கப்படும் அதன்பின் இரவு 7 மணிக்கு இரவு உணவு வழங்கப்படும் எனவும் வாரத்தில் ஒருமுறை அல்லது இரண்டுமுறை கைதிகளுக்கு அசைவ உணவு வழங்கப்படுகிறது, பார்வையாளர்கள் வார இறுதி நாட்களில் வந்தாள் அவர்களுக்கும் அசைவ உணவு வழங்கப்படும் என்று தெரிவித்தனர்.

பகலில் வேலைகள் முடிந்த பிறகு பார்வையாளர்கள் தரையில் மட்டுமே தூங்க வேண்டும் மற்றும் அவர்கள் ஒரு சிறையில் அடைக்கப்படுவார் என்று தெரிவித்தனர்.  சிறை வாழ்க்கையை தத்ரூபமாக்க இவ்வாறு செய்ய திட்டமிட்டுள்ளோம் என்றனர். 

சிறைக்கு வரும் பயணிகள் சில குற்றவாளிகளுடன் உடை பழக்கங்கள் ஏற்படலாம்.  சிறையில் மரண தண்டனை கைதிகள், கொலை வழக்கில் உள்ள கைதிகள், வீரப்பனின் கூட்டாளிகள், கற்பழிப்பு வழக்குகளில் வந்தவர்கள் என அனைவரும் உள்ளனர்.  கைதிகளின் வாழ்க்கை குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது மற்றும் குற்றங்களை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


ALSO READ : இப்படியும் சகோதரிகளா..! தங்கள் கல்லீரலையே தம்பிக்கு தானமளித்த சகோதரிகள்

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்