நோய் எதிர்ப்பு சக்தி தரும் கிராம்புக் குடிநீர்........

Image
 தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்டாக செயல்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்திக்கும், உடல் உள் உறுப்புகளில் ஆக்சிஜன் சீராக கிடைக்கவும் 'கிராம்புக் குடிநீர்' உதவும்.  இதை தயாரிக்கும் முறை:  கிராம்பு - 2,  ஏலம் - 2,  சுருள் இலவங்கப்பட்டை - 1,  அதிமதுரம் சிறுதுண்டு,  சுக்கு சிறுதுண்டு,  மிளகு - 10,  மஞ்சள் சிறிதளவு  இவைகளை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த பொடியில் ஒரு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ச்சி அதில் எலுமிச்சை பழம் பாதிப் பிழிந்து, புதினா இலை 2, தேன் கலந்து குடித்து வந்தால் உடலுக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் கிடைக்கும்.  இதனால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், உடல் உள்ளுறுப்புகளுக்கு தேவையான ஆக்சிஜன் நன்றாக கிடைக்கும்.  இது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுவதால் தேவையில்லாத கழிவுகளை வெளியேற்றி உடலை கேடயமாக பாதுகாக்கிறது. ALSO READ :  மதுரை மட்டன் குடல் குழம்பு.. இதோ ரெசிபி...!

இணையத்தை கலக்கும் Hardik Pandya-வின் வாட்ச்: விலையை கேட்டால் ஷாக் ஆகிடுவீங்க!!

 ஹார்திக் பாண்டியா இன்ஸ்டாகிராமில் புதிய கைக்கடிகாரம் அணிந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். ஹார்திக்கின் இந்த கைக்கடிகாரம் இணையத்தில் ஒரு பரபரப்பை உருவாக்கியுள்ளது.   


இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் ஹார்திக் பாண்டியா மிக குறுகிய காலத்தில் தனது வாழ்க்கையில் பெரிய அளவு வெற்றியை அடைந்துள்ளார். ஹார்திக் பாண்டியா ஆடம்பர வாழ்க்கைக்காக அறியப்படுகிறார்.

ஹார்திக் பாண்டியா மிக குறுகிய காலத்தில் உலக கிரிக்கெட்டில் அதிக அளவிலான செல்வத்தையும் புகழையும் பெற்றார். ஐபிஎல் 2021 இன் (IPL 2021) அடுத்த கட்ட போட்டிகளில் விளையாட  ஹார்திக் பாண்டியா இப்போது துபாயை அடைந்துள்ளார்.


ஹார்திக்கின் கடிகாரம் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது


ஹார்திக் பாண்டியா இன்ஸ்டாகிராமில் புதிய கைக்கடிகாரம் அணிந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். ஹார்திக்கின் இந்த கைக்கடிகாரம் இணையத்தில் ஒரு பரபரப்பை உருவாக்கியுள்ளது. 

ஹார்திக் பாண்டியாவின் (Hardik Pandya) கடிகாரத்தின் விலையை அறிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். ஹார்திக் பாண்டியாவின் இந்த கடிகாரத்தின் விலை ரூ .5 கோடிக்கும் மேலாகும்.

ஹார்திக்கின் இந்த கடிகாரம் மிகவும் சிறப்பு வாய்ந்தது

ஹார்திக் பாண்டியாவின் இந்த கடிகாரம் படேக் பிலிப் நாட்டிலஸ் பிளாட்டினம் 5711 (Patek Philippe Nautilus Platinum 5711) பிராண்ட் கைக்கடிகாரமாகும். ஹார்திக் பாண்டியா மற்றும் அவரது சகோதரர் க்ருனால் பாண்டியா ஒரு நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களது கடின உழைப்பே அவர்களை இன்று இந்த மேம்பட்ட நிலைக்கு கொண்டு சென்றுள்ளது. இருவரும் சமூக ஊடகங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பாண்டியா பிரதர்ஸ் விலையுயர்ந்த கடிகாரங்கள் மற்றும் வாகனங்களை விரும்புகிறார்கள்

ஹர்திக் பாண்டியா மற்றும் அவரது சகோதரர் க்ருனால் பாண்டியா ஆகியோர் விலையுயர்ந்த கடிகாரங்கள் மற்றும் வாகனங்களை விரும்புகிறார்கள். சகோதரர்கள் இருவரும் மும்பையில் 30 கோடி மதிப்புள்ள ஒரு சொகுசு ஃப்ளாட் வாங்கியுள்ளனர். 

ஹர்திக் பாண்டியா மற்றும் அவரது சகோதரர் க்ருனால் பாண்டியாவின் இந்த குடியிருப்பில் 8 படுக்கையறைகள் உள்ளன. பாண்டியா சகோதரர்களின் ஆடம்பரமான வீடு 3838 சதுர அடியில் கட்டப்பட்டுள்ளது.


also read : 'கர்ப்பமாக இருப்பது ரொம்ப சிரமம்தான்..!' - ஒருநாள் கர்ப்பிணியாக வாழ முயன்ற டிக்டாக் பிரபலம்

Comments

Popular posts from this blog

மாணவர்களும்...சமுதாய தொண்டும்...

நேபாளத்தில் பறவை காய்ச்சல் எதிரொலி; ஆயிரக்கணக்கில் பண்ணை பறவைகள் அழிப்பு

குழந்தைகளுடன் இந்த கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழிகள்